Women entrepreneurs 
வீடு / குடும்பம்

சமூக மாற்றத்தில் பெண் தொழில் முனைவோரின் பங்களிப்பு!

நவம்பர் 19, பெண் தொழில் முனைவோர் தினம்

எஸ்.விஜயலட்சுமி

பெண் தொழில் முனைவோர் சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். பல்வேறு வழிகளில் பெண்களுக்கான முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறார்கள். அவர்களின் சிறப்பு இயல்புகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பெண் தொழில் முனைவோரின் சிறப்பியல்புகள்:

முன் மாதிரிகள்: வெற்றிகரமான பெண் தொழில் முனைவோர் பிற பெண்களுக்கு முன்மாதிரியாக செயல்படுகிறார்கள். வணிகத்தில் முன்னணியில் பெண்களால் சிறந்து விளங்க முடியும், வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிக்கிறார்கள். இதனால் பிற பெண்களை தங்களைப் போலவே தொழில் முனைவோராக உருவெடுக்க நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஊக்குவிக்கிறார்கள்.

பொருளாதார வலுவூட்டல்: ஒரு புதிய தொழிலை தொடங்கி அதை வளர்த்து வெற்றிகரமாக மாற்றுவதன் மூலம் பெண்கள் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், உள்ளூர் பொருளாதரங்களை ஊக்குவித்து வறுமையை குறைப்பதற்கும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறார்கள்.

புதுமை மற்றும் பன்முகத் தன்மை: பெண்கள் வணிக உலகிற்கு தனித்துவமான கண்ணோட்டங்களையும் யோசனைகளையும் கொண்டு வருகிறார்கள். இது பல்வேறு நுகர்வோர் தேவைகளை பிரதிபலிக்கும் புதுமை மற்றும் ஆக்கப்பூர்வமான தீர்வுகளுக்கு வழி வகுக்கிறது. இறுதியில் நுகர்வோர் சந்தையை வளப்படுத்துகிறது.

சமூக மேம்பாடு: பெண் தொழில் முனைவோர் பெரும்பாலும் உள்ளூர் வணிகம் மற்றும் பெண்கள் தயாரிப்புகளில் தங்கள் சமூகங்களில் முதலீடு செய்கிறார்கள். உள்ளூர் வணிகம் மற்றும் முன் முயற்சிகளை ஆதரிக்கிறார்கள். இது சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கிறது மற்றும் சமூக நல வாழ்வை மேம்படுத்துகிறது.

சமத்துவம்: பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொழில்களில் வெற்றி பெறுவதன் மூலம் பெண் தொழில் முனைவோர் பாலின பாத்திரங்கள் மற்றும் திறன்களைப் பற்றிய ஒரே மாதிரியான கருத்துக்களை உடைத்து சமூகத்தில் ஆண்களும் பெண்களும் சமம் என்கிற சமத்துவத்தை நிறுவ பாடுபடுகிறார்கள். பல பெண்கள் தலைமையில் அமைந்த வணிகங்கள், சமூக தாக்கம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. சமத்துவமின்மை சுகாதார மற்றும் கல்வி போன்ற அழுத்தமான சமூகப் பிரச்னைகளை நிவர்த்தி செய்து அதன் மூலம் சமத்துவமான சமூகத்திற்கு பங்களிக்கின்றன.

நெட்வொர்க்கிங் மற்றும் ஒத்துழைப்பு: பெண் தொழில் முனைவோர் பெரும்பாலும் நெட்வொர்க் மற்றும் ஆதரவு அமைப்புகளை உருவாக்குகிறார்கள். இது பெண்களிடையே ஒத்துழைப்பு மற்றும் அறிவு பகிர்வை செயல்படுத்துகிறது. சமூகம் மற்றும் பரஸ்பர ஆதரவின் உணர்வை வளர்க்கிறது.

வழி காட்டுதல்: பல பெண் தொழில் முனைவோர் பலருக்கும் வழிகாட்டியாக செயல்படுகிறார்கள். அடுத்த தலைமுறை பெண் தலைவர்களுக்கு அதிகாரம் அளித்து வணிகத்தில் வெற்றி பெறத் தேவையான கருவிகள், உதவிகள் மற்றும் நம்பிக்கையை தந்து அவர்களை ஆயத்தப்படுத்துகின்றனர்.

வேலை, வாழ்க்கை சமநிலையை ஊக்குவித்தல்: நெகிழ்வான பணிச்சூழல்கள் மற்றும் கொள்கைகளுக்காக வாதிடுவதன் மூலம் பெண் தொழில் முனைவோர் பெரும்பாலும் முன்மாதிரியாக வழிநடத்துகிறார்கள். அனைத்து ஊழியர்களுக்கும் வேலை வாழ்க்கை சமநிலையை மதிப்பிடும் கலாசாரத்தை ஊக்குவிக்கிறார்கள்.

சமூக மாற்றங்கள்: பெண் தொழில் முனைவோர் தங்கள் முயற்சிகளில் எதிர்கொள்ளும் போராட்டங்கள், சவால்கள், தடைகளைத் தாண்டி வெற்றி பெற்று விளங்குவதன் மூலம் பிற பெண்களுக்கு உத்வேகத்தையும் தங்களாலும் சாதிக்க முடியும் என்கிற ஆழமான நம்பிக்கையும் விதைத்து பெரிய அளவில் சமூக மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். தங்களது லட்சியங்களை அடைய குறிப்பிடத்தக்க அபாயங்களை எதிர்கொள்கின்றனர். மேலும் வளர்ச்சி, படைப்பாற்றல் மற்றும் சிக்கல்களை தீர்ப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.

பெண்களுக்கு சொந்தமான ஸ்டார்ட் அப்களை நோக்கமாகக் கொண்ட மானியங்கள், கடன்கள் அல்லது முதலீட்டின் நிதிகளை உருவாக்கவும், பெண் தொழில் முனைவோரை மையமாகக் கொண்ட கிரவுண்ட் ஃபண்டிங் தளங்களை உருவாக்கவும் முன்வர வேண்டும். இதனால் பெண் தொழில் முனைவோரின் எண்ணிக்கை அதிகமாகும்.

அதிக நேரம் உடற்பயிற்சி செய்தவர் மரணம்: ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

ஹேண்ட்பேக் வாங்க போறீங்களா? அப்ப இதை கவனிங்க..!

ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த இந்தியா!

கண்ணனும் புல்லாங்குழலும்!

கேன்சல் செய்யப்பட்ட காசோலை: வங்கிகள் கேட்பது ஏன்?

SCROLL FOR NEXT