gratitude 
வீடு / குடும்பம்

நன்றியுணர்வு தரும் எண்ணற்ற நன்மைகள்!

எஸ்.விஜயலட்சுமி

னிதர்களுக்கு மிக முக்கியமான ஒன்று நன்றியுணர்வு. செப்டம்பர் 21ம் தேதி உலக நன்றி உணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் நம் வாழ்வில் உள்ள பல அற்புதமான விஷயங்களை பற்றி சிந்தித்துப் பார்த்து அவற்றுக்கு நன்றி சொல்ல வேண்டும். நன்றி உணர்வு பாராட்டுவதன் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்?

இவ்வுலகில் நாம் நன்றி சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. தேவைப்படும் காலகட்டத்தில் பண உதவி செய்தவர்கள், உடல்நிலை சரியில்லாதபோது உதவியவர்கள், தனக்கு நேரும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றியவர்கள் போன்றவர்கள் மட்டும் நமது நன்றிக்குரியவர்கள் அல்ல.

நாம் தினந்தோறும் எதிர்கொள்ளும் அலுவலக உதவியாளர்கள் தொடங்கி, அலுவலக மேலாளர்கள், சக பணியாளர்கள், பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும்போது நம்மை பத்திரமாக அழைத்துச் செல்லும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், நமது வீட்டு வேலையை குறைக்கும் வீட்டு பணியாளர்கள் போன்றவர்களும் நன்றிக்குரியவர்கள். தமது அன்பால் நமது மனதை நிறைக்கும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், வீட்டின் செல்லப்பிராணிகள், கண்ணுக்கு விருந்தளிக்கும் அழகிய தோட்டத்து மலர்கள், இந்த உலகையே தன் ஒளியால் பிரகாசமாக வைத்திருக்கும் சூரியன், நாம் உயிர் வாழ  உதவும் காற்று, தண்ணீர், ஆகாயம், நெருப்பு, பூமிக்கும் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும்.

நன்றியுணர்வின் அற்புத நன்மைகள்:

மன ஆரோக்கிய மேம்பாடு: நன்றியுணர்வு நம் ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தும் ஒரு அற்புத சக்தியாகும். மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு போன்றவற்றை முழுவதுமாக நீக்கி நம்மை உயிர்ப்போடும் உற்சாகமாகவும் இது  வைக்கிறது.

உறவு மேலாண்மை: உறவினர்களிடையே நன்றியுணர்வு பாராட்டும்போது பச்சாதாபம், புரிதல் ஆகிய உணர்வுகள் வளர்ந்து உறவுகளை வலுப்படுத்தும்.

நேர்மறை அம்சம்: நன்றியுணர்வு மிகப்பெரிய நேர்மறை அம்சமாக மாறுகிறது. நெகிழ்ச்சியான சுபாவத்தை அளிக்கிறது. துன்பம், அதிர்ச்சி போன்றவற்றை கூட சமாளித்து அவற்றிலும் ஏதாவது நல்ல விஷயங்களை காணும் மனப்பக்குவம் வருகிறது.

ஆரோக்கியம்: நன்றியுணர்வை கடைப்பிடிப்பவர்கள் குறைந்த இரத்த அழுத்தம், வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பு, நல்ல மனநிலை போன்ற சிறந்த உடல், மன  ஆரோக்கியத்தை கொண்டிருக்கிறார்கள்.

உணர்ச்சி நுண்ணறிவு: நன்றியுணர்வு பயிற்சி ஒருவரை உணர்ச்சி நுண்ணறிவு மிக்கவராக மாற்றும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறனை அதிகரிக்கும். அதனால் எல்லோராலும் விரும்பப்படும் நபர்களாக இருக்கலாம்.

தனிப்பட்ட வளர்ச்சி: நன்றி உணர்வோடு இருப்பது ஒருவரை நேர்மறை சிந்தனையோடு செயல்பட உதவுகிறது. வாழ்க்கையின் நோக்கம், இலக்குகளை நோக்கி சிறப்பாக செயல்பட வைக்கிறது இதனால் தனிப்பட்ட வளர்ச்சி அதிகரிக்கிறது.

நல்ல உறக்கம்: தூங்கப்போகும் முன் நன்றியுணர்வை பயிற்சி செய்யும்போது மன அழுத்தம், பதற்றம் குறைந்து மனதில் நிம்மதி நிறையும். அது நல்ல ஆழமான தூக்கத்திற்கு வழி வகுக்கும்.

சுய விழிப்புணர்வு: ஒருவர் தான் எதற்காக நன்றி உள்ளவராக இருக்கிறோம் என்பதில் கவனம் செலுத்தும்போது அவருடைய மதிப்புகள், பலம் மற்றும் பலவீனங்கள் உட்பட தன்னைப் பற்றிய கூடுதல் புரிதலை வளர்க்க உதவும். அதனால் அவருடைய சுயவினை விழிப்புணர்வு நன்றாக அதிகரிக்கிறது.

வெறுப்புணர்வு அகற்றம்: நன்றியுணர்வோடு இருக்கும் ஒருவரது மனதில் வெறுப்புணர்வு நீங்கிவிடும். நேர்மறையான அம்சங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் பிறரை எளிதாக அவர்கள் மன்னிக்க முடியும். அதனால் அவரது மனம் எப்போதும் சாந்தமாக இருக்கும்.

ஒட்டுமொத்த நல்வாழ்வு: நன்றியுணர்வை தினமும் பயன்படுத்துவதன் மூலம் வாழ்க்கை, உறவுகள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி, மகிழ்ச்சி, திருப்தி போன்ற ஒட்டுமொத்த நல்வாழ்வும் மேம்படும்.

தினமும் நன்றியுணர்வை பிரயோகிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.

Machine Learning ல இவ்ளோ விஷயம் இருக்கா?

ஆண் குழந்தைகளின் எதிர்காலமும், பெற்றோர்களின் பங்களிப்பும்! 

மனிதர் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு கடற்கரையோர சுத்திகரிப்பின் அவசியம்!

உடலில் ஏற்படும் மருக்கள்... சாதாரணமாக நினைக்க வேண்டாம்!

பெருமாளிடம் சனி பகவான் பெற்ற வரம் என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT