Mother's depression 
வீடு / குடும்பம்

அம்மாக்களின் மனஅழுத்தம் - ஆய்வுகள் அளிக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

கல்கி டெஸ்க்

- மணிமேகலை

தற்போதைய காலகட்டத்தில் மனஅழுத்தம் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.  குறிப்பாக, அம்மாக்களுக்கு மனஅழுத்தம் அதிகமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  இவர்களின் மன அழுத்தத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம்.  கணவர், குழந்தைகள், உறவினர்கள், பணப் பிரச்சனை, குடும்பத்தை சமநிலைப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சனை, வீட்டில் உள்ள வேலைகள், வேலைப்பார்க்கும் பெண்களாக இருந்தால் அங்கு உள்ள பிரச்சனை, தன்னைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது, தனக்கான நேரத்தை செலவிடாமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்! அவர்களுக்கு தங்கள் சொந்த வேலைகளை கவனித்து கொள்ளக் கூட நேரமில்லை என்பதே நிதர்சன உண்மை. புத்தகம் படிப்பது, பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது போன்றவற்றை அவர்கள் மறந்து விடுகிறார்கள். குளித்தோமா? சாப்பிட்டோமா? என்பது கூட அவர்களுக்கு நினைவில் இருப்பதில்லை. சில சமயங்களில் அதற்கான நேரமும் கிடைப்பதில்லை.

கடந்த மாதம் 7,000 க்கும் அதிகமான அமெரிக்க தாய்மார்களிடம் 'டுடேமாம்ஸ் டாட் காம்' என்ற இணையதளம் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இந்த கணக்கெடுப்பின் படி, மூன்று குழந்தைகளுடைய அம்மாக்கள், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை உடைய அம்மாக்களை விட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பது வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை உடைய அம்மாக்கள் குறைந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்களாம். 75 சதவீத அம்மாக்கள் மற்ற குழந்தைகளின் அம்மாக்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்களாம்.

கடந்த ஏப்ரல் மாதம், 'டுடே டாட் கம்' மற்றும் 'இன்சைட்' எக்ஸ்பிரஸ் இணைந்து ,7164 அமெரிக்கத் தாய்மார்களிடம் ஆன்லைனில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இதன்படி, 6௦ சதவீத அம்மாக்கள் தாங்கள் நினைத்த வேலையை செய்ய நேரமில்லாமல்  போகும்போது அதிக  மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். 46 சதவீத அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை விட கணவரால் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்களாம். 60 சதவீத அம்மாக்கள் ஆண்குழந்தைகளை வளர்ப்பதைக் காட்டிலும் பெண் குழைந்தைகள் வளர்ப்பது அதிக மன உளைச்சலைத் தருகிறது என்கிறார்கள். 

இந்த இரு ஆய்வுகள் அமெரிக்காவில் நடத்தப்பட்டாலும , இந்தியாவில் உள்ள அம்மாக்களுக்கும் இதுபோன்ற  நிலையை, ஒவ்வொரு நாளும், தங்கள் வாழ்வில் கடந்து வருகிறார்கள் என்பதை நம்மால் மறுக்க முடியாது. எனவே, ஒவ்வொரு கணவரும் தன் மனைவியுடன் வீட்டு .வேலையைப் பகிராவிட்டாலும், அவர்களுக்கு எப்போதும் ஆறுதலாக, ஆதரவாகவாவது  இருக்கலாம்.   குழந்தைகளை வளர்ப்பது வெறும் அம்மாக்களின் கடமை எனப் பார்க்காமல், இருவரின் கடமை என உணர வேண்டும். மனைவியின் விருப்பு வெறுப்புகளை தெரிந்து அதற்கு மதிப்பளிப்பதும் அவசியமான ஒன்று.

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

SCROLL FOR NEXT