வீடு / குடும்பம்

வீட்டுத் தோட்டத்தில் பீன்ஸ் வளர்க்க ஏற்ற காலம் இது!

க.இப்ராகிம்

ழைக்காலத்தில் வீட்டுத் தோட்டத்தில் பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை எளிதாக வளர்க்க முடியும். மேலும், வீட்டுத் தோட்டத்தில் பயிரிட மற்றும் புதிதாக மாடித்தோட்டம் அமைத்திடவும் ஏற்றது இந்த மழைக்காலம். வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்படும் காய்கறிச் செடி வகைகள் வீட்டுத் தேவைகளை உள்ளடக்கியவையாக இருப்பதால் குறைந்த அளவில், பல்வேறு வகையான காய்கறி செடிகளைப் பயிரிடலாம்.

இந்தநிலையில், தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் வைக்க விரும்புவர்கள் தக்காளி, வெங்காயம், பீன்ஸ், கேரட் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளை பயிரிடுவர். அதிலும் குறிப்பாக பீன்ஸ் பயிரிடுவது வீட்டுத் தேவைகளுக்கு மட்டுமல்லாமல், வருமானம் தரும் விதமாகவும் இருக்கும்.

மிகக் குறைந்த பரப்பளவில் பீன்ஸை 5 சென்டி மீட்டர் இடைவெளியில், 3 சென்டி மீட்டர் ஆழத்தில் பயிரிட்டால் ஒரு மாதத்தில் இது பயன் தரும். மேலும், பீன்ஸ் வளர்க்க அதிகளவிலான தண்ணீர் தேவை என்பதால் மழைக்காலம் பீன்ஸை நடவு செய்ய ஏற்ற காலமாகும். பகுதி அளவு சூரிய ஒளி கிடைக்கும் இடத்தை தேர்வு செய்து பீன்ஸை பயிரிடுவது ஏற்றது. பீன்ஸ் அதிக விளைச்சலை தருவதால் அக்கம் பக்கம் வீடுகளிலும் விற்பனை செய்துகொள்ள முடியும்.

மேலும், பீன்ஸினுடைய வேர்கள் மென்மையானதாக இருக்கும். அதனால் பயிரிடும் பொழுதே சரியான இடத்தை தேர்வு செய்து பயிரிட வேண்டும். இல்லையென்றால் இடத்தை மாற்றும் பொழுது பீன்ஸ் சேதமடையும். மேலும், உரங்களாக வீட்டில் பயன்படுத்தப்படும் தாவர உணவு கழிவுகளை பயன்படுத்தலாம். மேலும், மாநகராட்சி பகுதிகளில் அரசின் சார்பிலேயே இயற்கை உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை வாங்கியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், தக்காளி, வெங்காயம், கத்திரிக்காய், பீன்ஸ், அவரைக்காய், வெண்டைக்காய், புடலங்காய், கேரட், பீட்ரூட், சுரைக்காய், பூசணிக்காய் போன்ற பயிர்களையும் வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டு பயன்பெற முடியும்.

மாடி தோட்டத்தில் பயிரிடுபவர்கள் படிக்கட்டு வடிவிலான பலகைகளை அமைத்து நடவு செய்தால் குறுகிய இடத்தில் அதிக அளவிலான காய்கறிகளை நடவு செய்ய முடியும். இதனால் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் வாங்கும் செலவு பெருமளவில் மிச்சமாகும்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT