Which is the best water purifier in india? Image Credits: Her Zindagi
வீடு / குடும்பம்

உங்கள் வீட்டின் தண்ணீருக்கு ஏற்ப எந்த Water purifier பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

நான்சி மலர்

நாம் தினமும் அருந்தப் பயன்படுத்தும் தண்ணீரில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளான பாக்டீரியா, வைரஸ் போன்றவை இருக்கின்றன. இவை தண்ணீரின் மூலமாக காலரா, டையரியா, டைபாய்டு போன்ற நோய்களை மக்களுக்குப் பரப்புகிறது. சுகாதாரமான தண்ணீரை அருந்துவதற்காகத்தான் நம்முடைய வீடுகளில் வாட்டர் ப்யூரிபையர் பயன்படுத்துகிறோம். இந்த வாட்டர் ப்யூரிபையரில் எத்தனை வகைகள் இருக்கின்றன? அவற்றில் உங்கள் வீட்டிற்குத் தேவையானது எது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

1. UV Filter Water purifier: Ultraviolet filter வாட்டர் ப்யூரிபையர் தண்ணீரில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளை 99.99 சதவிகிதம் கொன்றுவிடும். இது தண்ணீரில் இருக்கும் மினரல்களை நீக்காது. இதை வீட்டில் பொருத்துவதும் சுலபமானது. இது 9 முதல் 12 மாதம் வரை தாக்குப்பிடிக்கும்.

2. UF Filter Water purifier: Ultra filtration வாட்டர் ப்யூரிபையர் தண்ணீரில் உள்ள வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றை கொல்வது மட்டுமில்லாமல், தண்ணீரில் இருந்தும் அவற்றை முழுவதும் நீக்கிடும். இது மிகவும் தூய்மையான குடிநீரை வடிகட்டி நமக்குக் கொடுக்கும்.

3. NF Filter water purifier: Nano filtration வாட்டர் ப்யூரிபையர் தண்ணீரில் உள்ள பாக்டீரியா, வைரஸை அழிப்பதோடு, தண்ணீரில் இருக்கும் உப்புத் தன்மையையும் நீக்கக்கூடியது.

4. RO Filter Water purifier: Reverse osmosis வாட்டர் ப்யூரிபையர் தண்ணீரில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ், உப்புத்தன்மை, தண்ணீரின் நிறம் ஆகியவற்றை சுத்தப்படுத்தும்.

உங்கள் வீட்டு தண்ணீரின் TDS (Total dissolved solids) அளவை தெரிந்துக்கொள்ள TDS Meterஐ பயன்படுத்த வேண்டும். உங்கள் வீட்டில் 200 PPMக்கு கீழ் தண்ணீரின் TDS அளவு இருந்தால், அது குடிப்பதற்கு ஏற்ற சிறந்த தண்ணீராக கருதப்படுகிறது.

World health organization தண்ணீரில் TDS 300 PPM வரை இருக்கலாம் என்றும் BIS (Bureau Of Indian Standards) தண்ணீரில் 500 PPM வரையிருக்கலாம். அதைத் தாண்டி இருக்கக்கூடாது என்றும் கூறுகிறது.

உங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் 50 - 300 PPM வரையிருந்தால், UV+UF Filter போதுமானதாகும். இதுவே தண்ணீர் 300 - 600 PPM இருந்தால், UV+NF Filter போதுமானதாகும். 600 - 1200 PPM இருந்தால் கண்டிப்பாக RO Filter பயன்படுத்த வேண்டும். இந்தியாவில் RO Purifier சிறந்ததாகக் கருதப்படுகிறது. உங்கள் வீட்டில் RO Filter போட்டுவிட்ட பிறகு தண்ணீரின் PPM கம்மியாக இருக்கிறது என்று நினைத்தால், TDS Controllerஐ பயன்படுத்தலாம்.

நீங்கள் புதிதாக வாட்டர் ப்யூரிபையர் வாங்கப் போகிறீர்கள் என்றால், கண்டிப்பாக இந்தத் தகவல்களைப் பயன்படுத்திக் கொண்டு உங்க வீட்டில் உள்ள தண்ணீருக்கு ஏற்றவாறு ப்யூரிபையரை வாங்கி பயன் அடையுங்கள்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT