தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்வதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் நிகருக்கு தக்காளி விலை எகியுள்ளதால், என்ன செய்வதென்றே தெரியாமல் பலரும் கலங்கியுள்ளனர். அப்படி இருக்கையில் தக்காளியை வாங்கி அது அழுகி போய் தூக்கி போடும் போது நமக்கு நெஞ்செல்லாம் ஒரு பதறும். இப்படி நடப்பதை தடுக்கவும், தக்காளியை பாதுகாக்கவும் ஒரு சில வழிமுறைகளை பார்க்கலாம்.
நீங்கள் ஸ்டோர் செய்து வைத்திருக்கக்கூடிய தக்காளியில் ஏதேனும் ஒன்று கேட்டு விட்டால், அதனை உடனடியாக கவனித்து தூக்கி எறிந்து விட வேண்டும். இல்லை என்றால் ஒட்டுமொத்த தக்காளியும் கெட்டுப் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
பொதுவாக தக்காளியை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது என்று நமக்கு சொல்லப்படுகிறது. தக்காளியை எப்பொழுதும் அறை வெப்பநிலையில் தான் வைக்க வேண்டும். குறைந்த வெப்பநிலை கொண்ட ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. பழுத்திருக்கக் கூடிய தக்காளிகளை முதலில் பயன்படுத்துங்கள். பழுத்த தக்காளி உங்களிடம் அதிகமாக இருந்தால் மட்டுமே அவற்றை குளிர்சாதனை பெட்டியில் வைக்கவும்.
ஒவ்வொரு தக்காளியையும் நான்காக வெட்டி, அதனை ஃபிரீசரில் வைத்து விடுங்கள். அவை உறைந்து கெட்டியான உடன் அதனை காற்று உள்ளே செல்ல இயலாத ஒரு டப்பா அல்லது பாத்திரத்தில் வைத்து குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும். இவ்வாறு செய்தால் தக்காளிகள் 3 முதல் 4 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
தக்காளியை நீங்கள் நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் பழுக்காத பச்சையான தக்காளிகளை வாங்கவும். இவற்றை அறை வெப்ப நிலையில் நீங்கள் வைக்கும் பொழுது கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம். பழுக்க பழுக்க ஒவ்வொன்றாக எடுத்து பயன்படுத்துங்கள். அதே சமயம் நீங்கள் தக்காளியை வைத்திருக்கும் இடத்தில் ஈரப்பதம் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் தக்காளி விரைவாக கெட்டுவிடும்.
நீங்கள் ஸ்டோர் செய்து வைத்திருக்கக்கூடிய தக்காளியில் ஏதேனும் ஒன்று கேட்டு விட்டால், அதனை உடனடியாக கவனித்து தூக்கி எறிந்து விட வேண்டும். இல்லை என்றால் ஒட்டுமொத்த தக்காளியும் கெட்டுப் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே நீங்கள் சேமித்து வைத்த தக்காளியை தினமும் ஒரு முறை எடுத்து பார்ப்பது நல்லது.
தக்காளிகள் விரைவாக கெட்டுப் போகாமல் இருக்கவும், நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்தவும் அவற்றை தலைகீழாக வைக்கவும். இவ்வாறு வைப்பது மற்றும் சூரிய வெளிச்சத்தில் இருந்து விலக்கி வைப்பது தக்காளியை நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக வைக்க உதவும்
முதலில் தக்காளியை சுத்தமாக கழுவி அதனை ஒரு துணி பயன்படுத்தி துடைத்துக் கொள்ளவும். அதில் இருக்கக்கூடிய ஈரப்பதம் அனைத்தையும் எடுத்து விடுங்கள். பின்னர் தக்காளியை நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதனை காற்று புகாத ஒரு கண்டெய்னரில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இதனை நீங்கள் 10 முதல் 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.