Are you a believer that God will save you no matter what? Just read this story! Image Credits: Freepik
Motivation

கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புகிறவரா நீங்க? இந்த கதையை கொஞ்சம் படியுங்க!

நான்சி மலர்

ன்னதான் கடவுள் மீது அதீத பக்தி வைத்திருந்தாலும், கடவுளே நமக்காக எல்லா விஷயத்திலும் இறங்கி வருவார் என்று கண்மூடித்தனமாக இருப்பது தவறாகும். கடவுள் தன் பக்தர்களை யாரேனும் மூலம் நிச்சயம் காப்பாற்றுவார். அப்படி அவர் தரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நம்முடைய சாமர்த்தியமாகும். அதை புரிந்து கொள்ள இந்த கதையை முழுமையாக படியுங்கள்.

ஒரு கிராமத்தில் கடவுள் பக்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு எப்போதுமே கடவுளின் நினைப்பு மட்டும்தான். எந்நேரமும் கடவுளை மட்டுமே வேண்டிக் கொண்டிருப்பார். ஒருநாள் அவருடைய கிராமத்தில் பயங்கர மழை, புயல், வெள்ளம் என்று வந்துவிட்டது. இதைப்பார்த்து பயந்த கிராம மக்கள் அந்த ஊரையே காலி செய்துவிட்டு செல்கிறார்கள்.

அப்போது ஒருவர் கடவுள் பக்தரிடம் வந்து, 'ஐயா! இந்த கிராமத்தில் இருப்பது பாதுகாப்பில்லை. நீங்களும் எங்களுடன் வாருங்கள். இங்கிருந்து போய்விடலாம்' என்று சொல்கிறார். அதற்கு அந்த பக்தரோ,’ என்னை கடவுள் பார்த்துக் கொள்வார். நீங்கள் போங்க’ என்று அவரை அனுப்பி வைத்துவிடுகிறார்.

இப்போது மழைத்தண்ணீர் இடுப்பு வரை வந்துவிட்டது. அப்போது படகில் சென்ற ஒருவர், 'மழை நிற்பதுபோல தெரியவில்லை. எங்களுடன் படகில் வந்துவிடுங்கள்' என்று சொல்ல என்னை இறைவன் பார்த்துக் கொள்வார். நீங்கள் கிளம்புங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்து விடுகிறார்.

இப்போது தண்ணீர் கழுத்துவரை வந்துவிடுகிறது. ஹெலிகாப்டரில் காப்பாற்ற வந்தவர்கள் கயிற்றை கீழே போட்டு 'ஐயா, இதை பிடித்து மேலே வந்துவிடுங்கள்' என்று கூப்பிடுகிறார்கள். அதற்கு அந்த பக்தன், ‘என்னை இறைவன் காப்பாற்றுவார்’ என்று சொல்லி அவர்களையும் அனுப்பி வைத்து விடுகிறார். சிறிது நேரத்திலேயே அந்த பக்தர் இறந்துவிடுகிறார்.

இப்போது அந்த பக்தன் கோவமாக கடவுளிடம் சென்று, 'கெட்டவன், திருடன், குடிக்காரன் எல்லோரையும் காப்பாற்றிவிட்டாய். ஆனால், உன்னையே நம்பிக்கொண்டிருந்த என்னை மட்டும் கை விட்டு விட்டாயே!' என்று கேட்கிறார்.

அதற்கு கடவுள் சொல்கிறார், 'முதலில் உன்னை காப்பாற்ற ஒரு மனிதனை அனுப்பினேன். பிறகு ஒரு படகை அனுப்பினேன். கடைசியாக ஹெலிக்காப்டரை அனுப்பினேன். நீ வராததற்கு நான் என்ன செய்ய முடியும்' என்று கேட்டார்.

கடவுளே நேரில் வந்து வரம் கொடுக்க மாட்டார். யார் மூலமாவது வாய்ப்புதான் வழங்குவார். அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டியது நம் கையில்தான் உள்ளது. என்ன நான் சொல்றது சரிதானே?

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT