Do this when you don't know what to do next!
Do this when you don't know what to do next! 
Motivation

அடுத்தது என்ன செய்வது எனத் தெரியாதபோது இதை செய்யுங்கள்!

கிரி கணபதி

சில சமயங்களில் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கும். அடுத்தது வாழ்வில் என்ன செய்வது என்பதற்கான எந்த தெளிவும் இல்லாமல் குழப்பத்தில் இருப்போம். இதுபோன்ற தருணங்களில் நாம் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என யாரும் நமக்கு சொல்ல மாட்டார்கள். இது எல்லா நபர்களுக்கும் ஏற்படும் சரிசமமான உணர்வுதான். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி அனைவருக்கும் இத்தகைய நிலை நிச்சயம் ஏற்படும். 

ஆனால் இந்த பதிவு மூலமாக, வாழ்வில் அடுத்தது என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்தால், என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவை உங்களுக்கு ஏற்படுத்தப் போகிறேன். 

  1. உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.

இது உங்களுக்கு ஒரு சாதாரண பதிலாகத் தெரியலாம். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அலசி ஆராய்ந்து அடுத்த முடிவை எடுப்பது எளிதானது. எல்லா விஷயத்திலும் பெர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என்பதே உங்களை ஒரு இடத்தில் நிலையாக நிறுத்தி வைத்துவிடும். எனவே இப்போது உங்களிடம் இருக்கும் விஷயங்களை வைத்துக் கொண்டு, ஒரு அடி எடுத்து வைக்க முடியும் என்றாலும் அதை தைரியமாக எடுத்து வையுங்கள். இந்த முனைப்பு மட்டுமே உங்களை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். 

  1. சரியானதை செய்யுங்கள்.

உங்களுக்கு அடுத்தது என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை என்றால், கொஞ்சம் மாற்றி யோசித்து இதுவரை நீங்கள் செய்த செயலை வித்தியாசமாகவும் சரியாகவும் செய்யுங்கள். ஒரு விஷயம் ஒத்துவரவில்லை என்றால், அதையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் மேலும் பிரச்சனையே ஏற்படும். எனவே செய்யும் தவறுகளில் இருந்து திருத்திக்கொண்டு, சரியான விஷயங்களை கண்டுபிடித்து, அதில் உங்கள் முயற்சியை போடுவது அவசியம். 

ஒரு இடத்திற்கு போக வேண்டும் என பயணிக்கிறீர்கள் என்றால், தொடர்ந்து பயணித்தால் மட்டுமே குறிப்பிட்ட இடத்தை அடைய முடியும். எனக்கு எப்படி போவது எனத் தெரியவில்லையே? என ஏதும் செய்யாமல் இருந்தால், இறுதிவரை அந்த இலக்கை அடைய முடியாது. எனவே நீங்கள் எப்படி பயணிக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. சரியான திசையில் ஏதோ ஒரு வழியில் பயணிக்கிறீர்களா இல்லையா என்பதுதான் முக்கியம்.

  1. பாதிப்படையுங்கள்.

எனக்கு வாழ்வில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக்கூடாது என நினைப்பவர்களே வாழ்வில் எதையும் புதிதாக முயற்சிக்காதவர்களாக இருப்பார்கள். அத்தகைய நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்து விடாதீர்கள். உங்களுடைய பயம் உங்கள் வாழ்வை முடக்கி வைத்திருக்க விடாதீர்கள். உங்கள் வாழ்க்கையை அடுத்து எப்படி நகர்த்துவது என்பதற்கான பதில் உங்களுக்குத் தெரியவில்லை என்றால், யாராவது நமக்கு சொல்லிக் கொடுப்பார்கள் என சிந்திப்பதற்கு பதிலாக நீங்களே களத்தில் இறங்கி பதிலைத் தேடுங்கள் அல்லது புதிதாக பதிலை நீங்களே உருவாக்குங்கள். 

இது உங்களுக்கான வாழ்க்கை. எதுவாக இருந்தாலும் நீங்கள் தான் தனித்து போராடி கண்டுபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் பிறர் மீது எதிர்பார்ப்புகளை வைத்து, உங்களுக்கான வாழ்க்கையை வாழாமல் விட்டு விடாதீர்கள். எனவே உங்களுக்கான பதிலை தைரியமாக தேடிச் செல்லுங்கள். அந்த பிராசஸ் உங்களுக்கு பல விஷயங்களை கற்றுத் தரும். 

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள இனிப்பான ஆரோக்கிய நன்மைகள்!

நாய்கள் ஏன் செருப்பை அடிக்கடி கடிக்கின்றன தெரியுமா?

உங்கள் திறமைகளை வெளிக்காட்டத் தயங்காதீர்கள்!

நீரிழிவு எச்சரிக்கை: இந்த 5 பழக்கங்கள் இருப்பவர்கள் ஜாக்கிரதை!

Mammoth Cave: உலகின் மிகவும் நீளமான குகையை எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT