Motivation

புத்தகங்கள் படிப்பதன் உன்னத பயன்களை அறிவோமா?

செப்டம்பர்-8  உலக எழுத்தறிவு தினம்!

கோவீ.ராஜேந்திரன்

ற்கும் ஆர்வத்திற்கு தடை போடாதீர்கள்! பள்ளிகளில், கல்லூரிகளில் படித்து முடித்து பின்னர் ஒரு வேலைக்கு சென்ற பிறகு நம்மில் பலரும் கற்பதை மறந்து விட்டு வாழ்க்கை சூழலில் மாட்டிக்கொண்டு அதிலேயே நேரத்தை செலவிடுகிறோம். ஆனால் அது தவறு, நம் வாழ்வின் அன்றாட நடவடிக்கை களில் ஒன்றாக எதையாவது கற்றுக்கொள்ளவும் நேரம் செலவிட வேண்டும் என்கிறார்கள்.

அது வேலை சார்ந்த படிப்பாக இருக்கலாம், பொது அறிவு புத்தகமாக இருக்கலாம். சுய முன்னேற்ற நூல்களாக இருக்கலாம். நல்ல பொழுது போக்கு உதவும் இலக்கியம் சார்ந்த நூல்களாக இருக்கலாம் ஆனால் தொடர்ந்து எதையாவது கற்றவாறு இருக்க வேண்டும் என்கிறார்கள்.

ஒரு புதிய விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ளும் போது அல்லது படிக்கும்போது மூளைக்கு பயிற்சி கொடுத்து அதனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறீர்கள். எப்படி? நாம் படிக்கும் போது மூளையின் இரண்டு அடுக்குகள் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்கின்றன. நாம் படிக்கும் போது ஒரு வார்த்தையை மூளையின் மேல் பகுதி அது என்ன எழுத்து என்பதை உணர்கிறது, அதேவேளையில் கீழ்மூளை  அதற்கான அர்த்தத்தை நமக்கு உணர்த்துகிறது என்கிறார்கள் நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள்.

புதிய விஷயங்களை தெரிந்து அதை நடைமுறை படுத்த முயலும் போது, உங்களின் நம்பிக்கை வளர்கிறது, துணிவு ஏற்படுகிறது. புதிய விஷயங்களை படிக்கும் போது பதட்ட உணர்வை ஏற்படுத்தும் கார்டிசோல் குறைந்து நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என்கிறார்கள். இது மூளையின் மூப்பையும்,மறதியையும் தடுக்கும் என்கிறார்கள்.

புதிய விஷயங்களை படிக்கும் போது உங்களின் பிரச்சினைகளை தீர்க்க பல வழிகளை நீங்கள் உணர்வீர்கள்  என்கிறார்கள். புதியவைகளை அறிந்து கொள்ளும்போது உங்கள் சுய முன்னேற்றம் தடையின்றி நடக்கின்றது என்கிறார்கள். எனவே என்றும் கற்றுக் கொண்டே இருங்கள்

புத்தகம் படிப்பது அல்லது புதிதாக தெரிந்து கொள்ள நினைப்பது உங்களை ஒரு புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும், புத்துணர்ச்சி தரும். பல்வேறு சூழ்நிலைகளை நீங்கள் காண்பீர்கள், அந்த சூழ்நிலைக்குள் நுழைந்து பலவிதமான அனுபவங்களை பெறுவீர்கள்.

புதியதாக கற்கும் போது உங்கள் மூளைத்திறன் அதிகரிக்கிறது, மூளையின் ஆரோக்கியம் மேம்படுகிறது, மொழி அறிவு மேம்படுத்தப்படுகிறது, கற்பனை வளம் அதிகரிக்கிறது. தனிமை மிகப்பெரிய கொடுமை என்பார்கள். அந்த தனிமையை  தவிர்க்கும் கருவியாக கற்றல் உதவுகிறது. பயணத்தின் போதும், தனிமையின் போதும் புத்தகம் படித்தல் ஒரு உற்ற துணையாக இருக்கிறது .

மனச்சோர்வு அல்லது மனஅழுத்தம் உள்ள நேரத்தில் அதிலிருந்து மீண்டு வர சிலர் இசையை சிறிது நேரம் ரசிப்பார்கள், சிலர் காலாற நடப்பார்கள், சிலர் நண்பர்களுடன் நேரம் செலவழிப்பார்கள், சிலர் ரிலாக்ஸாக டீ சாப்பிடுவார்கள். ஆனால் இதெல்லாம் வேண்டாம் உங்களுக்கு பிடித்த ஒரு புத்தகத்தை சில நிமிடங்கள் படித்தாலே உங்கள் மனச்சோர்வு பறந்து விடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அமெரிக்காவில் செப்டம்பர் 6 ந்தேதி புத்தக வாசிப்பு தினமாக அனுசரிக்கப் படுகிறது. புத்தக தினம் வேறு ஒரு நாளில் கடைப்பிடிக்கப்பட்டாலும், வாசிப்பதை வலியுறுத்துகிறது இந்த தினம்.

புத்தகம் வாசிப்பாளர்களின் இறப்பு விகிதம் 20 சதவீதம் குறைகிறது என்கிறது மற்றோரு ஆய்வு. நல்ல ஒரு புத்தகம் படிப்பதன் மூலம் நாள் பட்ட வலிகளிலிருந்து நிவாரணம் பெற முடியும் என்பதையும் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர் பிரிட்டன் லிவர்பூல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். புத்தகம் மட்டும் அல்ல உங்களுக்கு பயனுள்ள எதை வேண்டும் என்றாலும் வாசிக்கலாம். கற்கும் ஆர்வத்திற்கு எப்போதும் தடை போடாதீர்கள்.

இந்திய அணிக்கு உதவுவாரா கிரிக்கெட்டின் கடவுள் சச்சின்!

புத்தகத்தை கையில் எடுத்தாலே தூக்கம் வருகிறதா? உங்களுக்கு சில யோசனைகள்!

அம்பலமாகிவிட்ட அஞ்சலியின் தகிடுதத்தங்கள்!

கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் கண் திறக்கும் யோக நரசிம்மர்!

இது மட்டும் தெரிந்தால் இனி வீட்டிலேயேதான் பிரட் செய்வீங்க! 

SCROLL FOR NEXT