பத்து வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய குடும்ப கஷ்டத்திற்காக நியூஸ் பேப்பர் போட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால், அன்று அவனுக்கு தெரியாது. தான் உருவாக்கப் போகும் கார்தான் உலகத்தின் Most luxurious காராக இருக்கப் போகிறது என்று.
1863 இங்லாந்தில் ஹென்ரி ராய்ஸ் பிறக்கிறார். இவருக்கு நான்கு வயதிருக்கும்போது இவருடைய தந்தையின் பிசினஸ் தோல்வியடைந்து இவர்களின் குடும்பம் வறுமையான நிலைமைக்கு வருகிறார்கள். இவருடைய ஒன்பதாவது வயதில் அப்பாவும் இறந்துவிடுகிறார். அதற்கு பிறகு குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்காக நியூஸ் பேப்பர் போடப் போகிறார். இவருடைய அத்தை 14 வயதில் இவரை ஒரு ரயில்வே கம்பெனியில் apprentice ஆக சேர்த்து விடுகிறார். அங்கே மூன்று வருடம் கடுமையாக உழைத்து தன்னுடைய 17 ஆவது வயதில் நல்ல மெக்கானிக்காக உருவாகிறார்.
என்னதான் நிறைய கம்பெனிகளுக்கு வேலைக்கு சென்றாலும், சொந்தமாக ஒரு கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்து சின்னதாக ஒரு எலெக்ட்ரானிக் சர்வீஸ் சென்டரை ஆரம்பிக்கிறார். என்ன தான் பிசினஸ் நன்றாக போனாலும் சில வருடங்களில் அதிக போட்டி ஏற்பட்டதால், இவருடைய தொழில் நஷ்டமடைகிறது.
அப்போதுதான் இவருக்கு ஒரு ஐடியா வருகிறது. நாம ஏன் சொந்தமாக தரமான கார்களை தயாரிக்கக்கூடாது என்று தோன்றுகிறது. இதற்காக பல வருடங்கள் கஷ்டப்பட்டு சொந்தமாக ஒரு காரை உருவாக்குகிறார். ஆனால், இந்த காரை மார்க்கெட்டிற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யும் அளவிற்கான காசு அவரிடமில்லை.
அப்போதுதான் Charles rolls என்பவர் ஒரு எக்ஸிபிஷனில் இவருடைய காரைப்பார்த்து வாயடைத்துப் போய் விடுகிறார். இப்போது இருவரும் கைக்கோர்த்து ஒரு கம்பெனி ஆரம்பிக்கிறார்கள். அந்த கம்பெனியின் பெயர் தான் ரோல்ஸ் ராய்ஸ். 1906ல் இருந்து இந்த கார் மக்களுக்கு சொகுசான பயணத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 118 வருடங்களுக்கு பிறகும் இன்றைக்கு Luxurious car என்றால் நம் நினைவிற்கு வருவது Rolls Royce கார்தான். இந்தியாவிலும் பல பிரபலங்களிடம் Rolls Royce car இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரின் தனித்துவமான வேலைப்பாடுகளுக்காகவும், அதிக சொகுசுக்காகவும், அதிக தரத்திற்காகவும் இந்த கார் மிகவும் பிரபலமடைந்தது. தற்போது உள்ள Rolls Royce காரில் அதிக விலை மதிப்புள்ளது Phantom coupe 8.99 கோடியாகும்.