motivation article Image credit - pixabay
Motivation

வெற்றிக்கு வழிவகுக்கும் இருபது நிமிட ரகசியம் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

ரு நாளைக்கு 20 நிமிடங்கள் மட்டுமே கவனம் செலுத்தி தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வெற்றிக்கு வித்திட உதவும் 9 முக்கிய விதிகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

1. தன்னை அறிதல்;

வாழ்வில் வெற்றிபெற நினைக்கும் ஒவ்வொருவரும் தன்னைப் பற்றிய சுய அறிவு கொண்டிருப்பது மிகவும் அவசியம். தன்னுடைய பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வது முன்னேற்றத்திற்கான பாதையை அமைக்கும். பலவீனமான விஷயங்களை களைந்து பலமுள்ள விஷயங்களை அதிகரித்துக் கொள்ளவேண்டும். 

2. மனத் தெளிவு;

தினமும் 20 நிமிடங்கள் தனக்காக ஒதுக்குவது மனதை தெளிவுபடுத்தவும் மனஅழுத்தத்தை குறைக்கவும் உதவும். மேலும் கவனத்தை மேம்படுத்தி பணிகளை திறமையாக செயல்படுத்துவதையும்  எளிதாக்குகிறது. 

3. இலக்கு அமைத்தல் மற்றும் திட்டமிடல்

இந்த நேரத்தை குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகளை அமைக்க பயன்படுத்தலாம். தனிப்பட்ட மற்றும் தொழில் முறை நோக்கங்களை அடைவதற்கான தெளிவான திட்டங்களை உருவாக்கிக் கொள்ளலாம். 

4. தியானம் / மூச்சுப் பயிற்சி;

தனக்கென இருபது நிமிடங்கள் தினமும் ஒதுக்கி அந்த நேரத்தில் தியானம் அல்லது மூச்சுப் பயிற்சியில் ஈடுபடலாம். ஆழ்ந்த சுவாசப் பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கும். ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும். மேலும் செய்யும் வேலையை கவனமாக சிறப்பாக செய்ய வைக்கும். 

5. ஆராய்தல்;

தன்னுடைய செயல்பாடுகளில் இருக்கும் முன்னேற்றம் அல்லது பின் தங்கிய நிலை இவற்றைப்பற்றி ஆராயலாம். இவற்றில் கவனம் செலுத்தும்போது பின்னடைந்த பகுதிகளை எவ்வாறு சீர் செய்து கொள்ளலாம் என்று யோசிக்க அவகாசம் கிடைக்கும். தினசரி செயல்களை சீரமைத்துக் கொள்ளலாம். உற்பத்தி திறனையும் செயல் திறனையும் அதிகரித்துக் கொள்ளலாம்.

6. நேர மேலாண்மை;

நேரத்தை சிறப்பாக எவ்வாறு செலவிடுவது என்பதைப் பற்றி சிந்திப்பதும், மேலும் நேரத்தை வீணடிக்கும் செயல்களையும் கண்டறிந்து அகற்ற இந்த 20 நிமிடம் உதவுகிறது. ஒவ்வொரு மணித்துளியையும் திறமையாக பயன்படுத்த இந்த பயிற்சி உதவும். 

7. அதிகரித்த படைப்பாற்றல்;

அமைதியான நேரத்தில் படைப்பாற்றல் மற்றும் புதுமையான சிந்தனையை வளர்த்துக் கொள்ளலாம். சிக்கல்களை தீர்க்கும் அதே நேரத்தில் தனிப்பட்ட வளர்ச்சியையும் அதிகரித்துக் கொள்ளலாம்.

8. மேம்படுத்தப்பட்ட உணர்ச்சி நுண்ணறிவு;

20 நிமிடங்கள் நமக்காக ஒதுக்கும்போது நமது உணர்வுகள் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பற்றிய சிந்தனையில் ஈடுபடலாம். இது பிறரிடம் பழகும்போது உணர்ச்சி நுண் அறிவுடன் இயங்க வைக்கும். இதனால் நட்பு, உறவு, தொழில் ஆகியவற்றில் சிறந்த தொடர்பு திறனை மேம்படுத்தும். 

9. தனிப்பட்ட வளர்ச்சி;

நிலையான சுய கவனம் தொடர்ச்சியான கற்றல் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கிறது. வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் வெற்றியை அடைவதற்கு உதவுகிறது. 

தினமும் 20 நிமிடங்கள் ஒதுக்கி, அந்த நேரத்தில் தன்னுடைய வெற்றிக்கான பாதையை ஒருவரால் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்.

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

SCROLL FOR NEXT