ராமகிருஷ்ண பரமஹம்சர் 
Motivation

‘நானை' விலக்கும் காலக் கணக்கு என்ன தெரியுமா?

இந்திராணி தங்கவேல்

சில நேரங்களில் குடும்பத்தில் பாகம் பிரிக்கும் பொழுது பங்காளிக்குள் சண்டை வருவது உண்டு. அம்மி, உரல் எனக்கு. நிலம் நீச்சு எனக்கு. தோட்டம், துரவு எனக்கு என்று எல்லாவற்றிற்கும் எனக்கு எனக்கு எல்லாம் நான் சம்பாதித்தது நான், நான் என்று கூறுவதை அடிக்கடி கேள்விபடுவோம். ஆனால் பாயில் சுருண்டு படுத்து கிடக்கும் தாத்தா பாட்டிகளை பார்த்து எனக்கு எனக்கு என்று அப்பாவும் சித்தப்பாவும் அடித்துக் கொள்வதை பார்க்க முடியாது. இதை உணர்த்தும் ஒரு சம்பவத்தை கதையாக பார்க்கலாம். 

நமக்கு நடக்கும் எல்லா செயல்களும் இயல்பான செயல்கள்தான். புரிந்ததை இன்பம் என்றும், புரியாததை துன்பம் என்றும் பிரித்துப் பார்க்காமல் வாழும் கலையை உணரவேண்டும். தத்துவம் இரண்டில் அடங்கி இருக்கிறது. சொத்தாசையில் விலகி இருங்கள். நான் என்ற அகந்தையில் விழாமல் இருங்கள். இந்த இரண்டும் படுபாதாளங்கள். கடந்த காலம் கடவுளோட கணக்குல, நிகழ்கால நம்மை நம்பி இருப்போருக்காக, எதிர்காலம் நிச்சயம் உனக்காக என்பதை நினைவில் கொள்வது நல்லது  என்கிறது காலக் கணக்கு.

இறைவன் மனிதர்களைப் பார்த்து இரண்டு முறை சிரிக்கிறார் என்றார் ராமகிருஷ்ண பரமஹம்சர். இது பற்றி அவர் மேலும் கூறும் பொழுது இந்த சொத்து என்னுடையது என்று பங்காளிகள் சண்டை போடும்போது ஒரு தடவையும், பயப்படாதே உன்னை நீண்ட நாட்கள் நான் வாழ வைக்கிறேன் என்று நோயாளியை பார்த்து டாக்டர் சொல்லும்போது மற்றொரு தடவையும் சிரிக்கிறார். சொத்து எல்லாம் என்னுடையது உயிரெல்லாம் என்னுடையது என்னும் மனிதனுக்கு நான் என்ற எண்ணம் ஏன் வருகிறது? என்று இறைவன் சிரிக்கிறார்.

நான் என்பது வெறும் மயக்கமே. நான் என்று பேசியவர்கள் ஒரு காலகட்டத்தில் வீழ்ந்து விடுவர். மனிதர்கள் நான் என்று ஒருபோதும் ஆணவம் கொள்ளக்கூடாது என்கிறார் ராமகிருஷ்ணர். 

வருங்கால தூண்களே! நான் என்னும் அகந்தை நரகத்தை அளிக்கும். ஆதலால் நல்லுலகம் அமைக்க  'நான்' என்பதை  முற்றிலும் துறப்போமாக!

சைபர் கிரைம்: திரைக்குப் பின் அதிகரிக்கும் குற்றங்கள்; சிக்கித் தவிக்கும் மக்கள்! தப்பிக்க என்ன வழி?

தெய்வீக மாதமான கார்த்திகையின் 12 சிறப்புகள்!

குடும்ப வாழ்விற்கு சகிப்புத்தன்மை இன்றியமையாதது!

யாரெல்லாம் பற்களுக்கு க்ளிப் பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

தாழ்வு மனப்பான்மையை தூக்கிப் போடுங்கள்!

SCROLL FOR NEXT