நாம் ஒரு காரியம் செய்யும் முன் அந்த காரியம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொள்வோம். ஆனால் சில சமயங்களில் அது தோல்வியில் முடிந்துவிடும். என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால் நாம் வைத்த கூறி தப்பியிருக்கும்.
நாம் வைத்த குறி தப்பாமல் காய் நகர்த்த வேண்டும் என்றால் இந்த 5ஜ பின்பற்றினால் போதும்.
1- இதுவரை சொல்லப்பட்ட நடைமுறைகளை அன்றாட வாழ்க்கையில் அமல்படுத்துங்கள். காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் உங்கள் இலக்குகளை மனதில் அசைபோடுங்கள். தன்னம்பிக்கை அளிக்கக் கூடிய வாக்கியங்களையும், உற்சாகம் தரும் வாக்கியங்களையும் உரக்க உச்சரியுங்கள். அந்த இலக்குகளை உருவகம் செய்து பாருங்கள். இதோடு முடித்து விடக்கூடாது. இலக்குகளை அடைவதற்கு நாள்தோறும், ஏதேனும் ஒரு நடவடிக்கை அல்லது திட்டத்தை வகுத்து செயல்படுத்துங்கள். அதை மறக்காமல் குறித்துக்கொள்ளுங்கள். பின்னர் செயலில் இறங்குங்கள்.
2- எதிர்மறையான எண்ணங்களை முதலில் துடைத்தெறியுங்கள். இலக்குகளை அடையும் உங்கள் நோக்கத்திற்கு அவைதான் தடைக்கற்கள். மனதில் எதாவது ஓர் ஓரத்தில் அவை ஒளிந்திருக்கும். நல்ல சிந்தனைகள் உருவாவதற்கும், நம்பிக்கையூட்டும் வாக்கியங்கள் மனதில் நிறைவதற்கும் நீங்களும், உங்கள் மனதுமே காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் இலக்குகளை அடைவதற்கு துணை செய்யும் வாக்கியங்களை மனதில் அசைபோட ஒருபோதும் மறக்காதீர்கள்.
3- இலக்குகளை அடையும் முயற்சியில் நாள்தோறும் நீங்கள் பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரும். அந்தச் சவால்களை குறித்து வையுங்கள். அந்தச் சவால்களை சமாளிக்க நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை பதிவு செய்யுங்கள். முயற்சிகளில் நீங்கள் எதிர்கொண்ட தடைகளை வரிசைப்படுத்துங்கள். தடைகளைத் தகர்க்க நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் வெற்றிகளையும் குறித்து வையுங்கள்.
இவ்வாறு வரிசைப்படுத்தும்போதுதான், நீங்கள் சந்தித்த தடைகள் எத்தனை என்பது புரியும். அவற்றை தகர்க்க நீங்கள் மேற்கொண்ட வழிகள்… வெற்றி கிடைத்தது எப்படி என்பதை உணர்ந்து அடுத்த கட்டத்துக்கு நீங்கள் செல்ல உதவியாக இருக்கும்.
4- உங்கள் இலக்குகளை அடைவதற்கு நல்ல நண்பர்கள் அவசியம். உங்கள் இலக்குகளை நோக்கிச் செல்வதற்கு அவர்கள்தான் உதவியாக இருப்பார்கள். உங்களுக்கு உந்துதலாக இருக்கும் நண்பர்கள் வட்டாரத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
அவர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால், இலக்குகளை அடைவதற்கு சிறந்த வழிகாட்டியை தேடித் சென்று அவரிடம் நட்பு பாராட்டுங்கள். அவர், உங்களின் ஆசிரியராக, சகோதரராக, சகோதரியாக, நண்பராக, அண்டை வீட்டாராக இருக்கலாம். அவர்கள்தான் உங்களின் இலக்குகளை அடைவதற்கு ஊக்கமளிக்கும், உந்துதல் அளிக்கும் காரணிகளாக இருப்பார்கள்.
5- இலக்குகளை அடைய நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளில் சின்ன வெற்றி கிடைக்கிறதா? அந்த வெற்றிக்கு உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். சிறு சிறு இலக்குகளை நிர்ணயித்து அதை எளிதாக அடையுங்கள். அந்த வெற்றியை நினைத்து மகிழுங்கள். அந்த மகிழ்ச்சி உங்களை உற்சாகப்படுத்தும். பாராட்டுக்களும், உற்சாகமான வார்த்தைகளுமே இலக்குகளை அடைவதற்கான நமது ஓட்டத்தை வேகப்படுத்தும்.
மேற்கண்டவத்தை படித்து விட்டீர்களா அவற்றை உங்கள் உள் மனதில் வாங்கிக் கொள்ளுங்கள் இனி வெற்றியை நோக்கி ஒரு இலக்கை நோக்கி பயணங்கள் நீங்கள் வைத்து கூறி எப்பொழுதும் தப்பாது.