A temple where an ax is given to the priest to open the temple door 
ஆன்மிகம்

கோயில் கதவைத் திறக்க பூசாரி கையில் கோடாரி கொடுக்கப்படும் ஆலயம்!

செளமியா சுப்ரமணியன்

லகிலேயே மிகவும் அசாதாரணமான, ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான கோயில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் திருவார்ப்பூவில்  அமைந்துள்ளது. இக்கோயிலில் அருளும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம். எனவே, இக்கோயில் 365 நாட்களும் திறந்தே இருக்கும்.

ஒருசமயம், கிரகணத்தின்போது கோயில் கதவு மூடப்பட்டது. கிரகணம் முடிந்து கதவைத் திறந்தபோது, ஸ்ரீ ​​கிருஷ்ணரின் இடுப்புப்பட்டை கீழே இறங்கிவிட்டதைக் கண்டார்கள் கோயில் அர்ச்சகர்கள். அந்த சமயத்தில் அங்கு வந்த ஸ்ரீஆதிசங்கராச்சாரியார், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால்தான் அவ்வாறு நடந்தது என்று சொன்னார். அன்று முதல் கிரகணத்தின் போது கூட இக்கோயில் கதவு மூடப்படுவதில்லை. அப்படி மூடினால் இக்கோயில் கிருஷ்ணர் பசி தாங்க மாட்டார் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இக்கோயில் கதவு இரண்டு நிமிடங்களுக்கு மட்டுமே மூடப்படுகிறது. 11.58 மணி முதல் 12 மணி வரை இந்த கோயிலில் நடை சாத்தி அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் கோயில் நடை திறக்கப்படுகிறது. நடை திறக்கும் தந்திரியின் கைகளில் ஒரு கோடாரியும் இக்கோயிலில் கொடுக்கப்படுகிறது. காரணம், கிருஷ்ணரின் பசியை சகித்துக்கொள்ள முடியாது என்று பக்தர்கள் நம்புவதால், ஏதோ ஒரு காரணத்தால் கோயில் கதவு திறக்கப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டால், கோடாரி கொண்டு கதவைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

கம்சனை கொன்ற பிறகும் ஸ்ரீ கிருஷ்ணர் மிகவும் உக்ரமாக இருந்தார். அந்த நிலையில் இருந்த கிருஷ்ணரே இக்கோயில் மூலவர் சிலையாகும். அபிஷேகம் முடிந்ததும் மூலவரின் தலையை உலர்த்தியவுடனேயே அவருக்கு நைவேத்திம் செய்யப்படுகிறது. அதன் பிறகே ஸ்ரீ கிருஷ்ணரின் அவருடைய உடல் உலர்த்தப்படும். காரணம், அந்த சிறிது நேரத்தைக் கூட ஸ்ரீ கிருஷ்ணர் பசியை பொறுத்துக்கொள்ள மாட்டார் என்பது ஐதீகம்.

இக்கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்தைப் பெறுவதில் கோயிலுக்கு வந்த அனைத்து பக்தர்களும் பங்கேற்க வேண்டும். பிரசாதம் பெறாமல் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. அதேபோல், இக்கோயில் தினமும் 11.58 மணிக்கு மூடுவதற்கு முன்பு, ‘இங்கு யாராவது பசியாக இருக்கிறீர்களா?’ என்று சத்தமாகக் கேட்பது வழக்கமாக உள்ளது. இக்கோயிலுக்கு வந்த பக்தர்கள் யாரும் பசியாக உறங்கச் செல்வதை ஸ்ரீ கிருஷ்ணர் விரும்புவதில்லையாம். இக்கோயில் பிரசாதத்தை உண்டால், அதன் பிறகு பசியால் யாரும் வருந்த மாட்டார்கள். அதோடு, வாழ்நாள் முழுவதும் அவர்கள் குடும்பத்தில் உணவுப் பிரச்னை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT