Bhiman Duryodhanan 
ஆன்மிகம்

பாரதப் போரில் துரியோதனனின் உயிர் பிரியாமல் இருந்ததற்கான காரணம் தெரியுமா?

க.பிரவீன்குமார்

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் குருக்ஷேத்திரத்தில் கடுமையான போர் நடைபெற்றது. இப்போரில் இரு தரப்பிலும் ஏராளமானோர் தங்களது உயிரை விட்டனர். கௌரவர் படைக்கு அன்று துரியோதனன் தலைமை ஏற்று நடத்திச் சென்றான். அன்றைய போரில் பகவான் கிருஷ்ணரின் சைகையின்படி துரியோதனனின் தொடையில் அடித்து அவனை சாய்த்தான் பீமன்.

துரியோதனனை உயிர் போகும்படி பீமன் அடித்தும் அவனது உயிர் அவனது உடலை விட்டுப் பிரியாமல் இருந்தது. இதற்கான காரணத்தை பகவான் கிருஷ்ணர் தனது ஞான சக்தியால் உணர்ந்து கொண்டார். அதன்படி துரியோதனனின் மனதில் இருந்த மூன்று கேள்விகள் அவனது உயிரை அவன் உடலை விட்டுப் பிரியாமல் செய்திருந்தன. அந்த மூன்று கேள்விகளை துரியோதனன் பகவான் கிருஷ்ணரிடம் கேட்க, அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் அளித்த சாதுர்ய பதில்களை இந்தப் பதிவில் காண்போம்.

கேள்வி 1: அஸ்தினாபுரத்தை சுற்றிலும் மதில்களை எழுப்பி இருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?

பதில்: நீங்கள் அஸ்தினாபுரத்தை சுற்றிலும் மதில்களை எழுப்பி இருந்தால் நான் நகுலனை அனுப்பி அந்தக் கோட்டை சுவர்களை தரைமட்டமாக்கச் செய்திருப்பேன். ஏனென்றால், நகுலன் அளவிற்கு வேகமாகக் குதிரையைச் செலுத்தக்கூடியவர் யாருமில்லை.

கேள்வி 2: துரோணாச்சாரியாரின் மறைவிற்குப் பின்னால் அசுவத்தாமனை நாங்கள் தளபதியாக்கி இருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?

பதில்: நீங்கள் அசுவத்தாமனைச் சேனாதிபதி ஆக்கிருந்தால் நான் தருமனை கோபப்படச் செய்திருப்பேன். ஏனென்றால், தருமனின் கோபத்திற்கு முன்னால் எப்பேர்ப்பட்ட மகாவீரனும் எரிந்து சாம்பலாகி விடுவான்.

கேள்வி 3: நாங்கள் விதுரரை மகாபாரதப் போரில் கலந்து கொள்ளச் செய்திருந்தால் நீங்கள் என்ன செய்திருபீர்கள்?

பதில்: ஒருவேளை விதுரர் உங்களுக்கு ஆதரவாகப் போர்க்களத்தில் கலந்திருந்தால் நானே அவருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போர்க்களத்தில் இறங்கி இருப்பேன் என்று பகவான் கிருஷ்ணர் கூறினார்.

இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை கிடைத்த பின்னர் துரியோதனனின் மனம் சாந்தி அடைந்து அவன் உயிர் அவனது உடலை விட்டுப் பிரிந்தது.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT