இன்று உடல் எடை என்பது அனைவருக்கும் ஒரு பிரச்னையாக, கவனிக்கத்தக்கதாக மாறிவிட்டது. மருத்துவர்களால் லோ கிளைசெமிக் டயட் பரிந்துரைக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் முதல் எடைக் குறைக்க விரும்புவோர் வரை அனைவருக்கும் இது மிகச் சிறந்த பலனைத் தருகிறது.
இரத்தத்தில் சர்க்கரையைக் கரைக்கும் விகிதத்தை கிளைசெமிக் என்ற அளவால் குறிப்பார்கள். இந்த சர்க்கரை கலக்கும் விகிதத்துக்கு ஏற்பத்தான் உடலில் இன்சுலின் சுரக்கும். சர்க்கரை நோயாளிகள் உடலில் இரத்தத்தில் மெதுவாகக் கரைந்தால்தான் இன்சுலின் சுரப்பும் சீராக இருக்கும்.
இதனால் இதய நோய் உட்பட பல்வேறு பிரச்னைகளிலிருந்து பாதுகாப்புப் பெற முடியும். அரிசி, கோதுமை, பார்லி, சிறுதானியங்கள், ரொட்டி, பருப்புகள், பழங்கள் என அனைத்திலுமே கார்போஹைட்ரேட் உள்ளது. இவற்றை நாம் உண்ணும்போது நம் உடலில் இதை எளிய சர்க்கரை மூலக்கூறுகளாக உடைத்து ஆற்றலாக மாற்றும். இப்படி ஒரு உணவுப் பொருள் சர்க்கரையாக மாறி இரத்தத்தில் கரையும் விகிதமே கிளைசெமிக் ஆகும். உணவுப் பொருட்கள் என்னென்ன விகிதத்தில் சர்க்கரையால் கரைகிறது என்பது கிளைசெமிக் இண்டெக்ஸ் எனப்படுகிறது.
லோ கிளைசெமிக் என்றால் 55, ஹை கிளைசெமிக் என்றால் 70+ என்பது இதன் மதிப்பீடு. கிளைசெமிக் டயட்டில் 55க்கும் குறைவான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படும். நியூட்ரிஷியண்ட் விகிதங்களை சரியாக சேர்ப்பதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையைக் குறைக்கலாம்.
உதாரணமாக, சர்க்கரை, ஆசிட் போன்றவை மெதுவாக செரிமானமாகும். எனவே, இதன் ஜி.ஐயை குறைக்க முடியும். ஒரு உணவை எவ்வளவு நேரம் அதிகமாக சமைக்கிறோமோ அவ்வளவு எளிதில், வேகமாக இரத்தத்தில் சர்க்கரையைக் கூட்டும். பழுத்த கனிகளுக்கு ஜி.ஐ மதிப்பு அதிகம். உதாரணமாக, பழுக்காத ஒரு வாழைப்பழத்தில் கிளைசெமிக் 30 என்றால் நன்கு கனிந்த ஒரு வாழைக்கு கிளைசெமிக் 48 என்று இருக்கும்.
இப்படிப் பல வகைகளில் உணவில் கிளைசெமிக்கை குறைப்பதன் மூலம் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கலாம். உடல் எடையையும் கட்டுப்படுத்தலாம்.