Tirupati Sri Venkateswara Perumal Temple 
ஆன்மிகம்

திருமலை திருப்பதிக்கு அழகு சேர்க்கும் 7 அம்சங்கள் எவை தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

திருப்பதி திருமலை திருத்தலத்துக்கு பெருமை சேர்க்கும் ஏழு விஷயங்கள் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன. அந்த ஏழு விஷயங்கள் என்னவென்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்!

ஏழு மலைகள்: திருப்பதி வேங்கடவன் கோயில் கொண்டுள்ள சப்தகிரி எனப்படும் ஏழு மலைகளின் பெயர்கள் கருடாத்ரி, வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணத்ரி ஆகியவையாகும்.

ஏழு நாமங்கள்: பெயரற்ற பரம்பொருளாம் பெருமாளை அடியார்களால் பல்வேறு நாமங்களால் அழைத்தாலும் திருமலை வாசலுக்கு ஏழு முக்கியப் பெயர்கள் இருக்கின்றன. அவை: ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேஸ்வரன், சீனிவாசன், பாலாஜி.

ஏழு தீர்த்தங்கள்: திருப்பதியில் உள்ள முக்கியத்துவம் பெற்ற தீர்த்தங்கள் 108 இருந்தாலும் அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக ஏழு தீர்த்தங்கள் உள்ளன. அவை: குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாச கங்கை, பாண்டு தீர்த்தம், பாப விநாசன தீர்த்தம், சுவாமி புஷ்கரணி தீர்த்தம் ஆகியவைதான் ஏழு தீர்த்தங்கள்.

ஏழு தலை ஆதிசேஷன்: ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனது ஏழு தலைகள்தான் ஏழுமலைகளாக விளங்கி வருவதாக ஐதீகம். பிரம்மோத்ஸவத்தில் கொடியேற்றத்திற்கு பிறகு வேங்கடவன் பெத்தசேஷ வாகனம் என்ற ஏழு தலை நாக வாகனத்தில் திரு வீதி உலா வருவது வழக்கம்.

ஏழு மகிமைகள்: திருமலை வாசனின் பெருமைக்கு அணிகலனாக ஏழு மகிமைகள் உள்ளன. அவை: சீனிவாச மகிமை, க்ஷேத்ர மகிமை, தீர்த்த மகிமை, பக்தர்கள் மகிமை, கோவிந்த நாமத்தின் மகிமை, பகுளா தேவியின் மகிமை, பத்மாவதியின் மகிமை ஆகியவை ஆகும்.

ஏழு கலச ராஜகோபுரம்: திருவேங்கடம் சன்னிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ராஜகோபுரத்திற்கு சப்த லோகங்களுடன் தொடர்பு கொள்வது போல ஏழு கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏழு முக்கிய இடங்கள்: கோவிந்தராஜர் சன்னிதி, பூவராகர் சன்னிதி, திருச்சானூர் கோயில், ஸ்ரீ பேடி ஆஞ்சனேயர் கோயில், ஸ்ரீவாரி சிகர தரிசனம், சிலாதோரண பாறைகள், ஸ்ரீவாரி பாதாள மண்டப கோயில் ஆகியவை திருப்பதியில் நாம் அவசியமாக தரிசிக்க வேண்டிய ஏழு இடங்கள் ஆகும்.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT