அருள்மிகு பீமேஸ்வரர் 
ஆன்மிகம்

பஞ்சம் தீர்க்கும் பரமசிவன் கோயில் எங்குள்ளது தெரியுமா?

பொ.பாலாஜிகணேஷ்

சேலத்தில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் சுமார் 50 தொலைவில், மாவுரெட்டி என்ற ஊரில் உள்ளது அருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் அருளும் சிவலிங்கம் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பெருமை மிக்கது. இதனாலேயே இத்தல ஈசன், ‘பீமேஸ்வரர்' எனப் பெயர் பெற்றார். இக்கோயில் திருமணி முத்தாற்றங்கரையில் அமைந்துள்ளது.

அம்பிகை

பஞ்சபாண்டவர்கள் காலத்தில் ஒருசமயம் அஸ்தினாபுரத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் தண்ணீர், உணவு இல்லாமல் மிகவும் கஷ்டத்திற்கு ஆளானார்கள். ‘இந்தப் பஞ்சத்தைத் தீர்க்க என்ன வழி?’ என்று அரச குருவிடம் கேட்டபோது, அசரீரி மூலம் ஒரு வாக்கு வந்தது. ‘பஞ்சபாண்டவர்கள் அனைவரும் வடதிசை நோக்கி செல்ல வேண்டும். அங்கு ஒரு வனத்தில் புருஷாமிருகம் உள்ளது. அது மிகவும் சக்தி வாய்ந்தது. அதுமட்டுமின்றி அது சிவபெருமான் அருள் பெற்றது. அதனைப் பிடித்து வந்தால் நாட்டில் நிலவும் கடும் பஞ்சம் தீரும்’ என்றது அந்த அசரீரி வாக்கு.

இதனைக் கேட்ட பஞ்சபாண்டவர்கள் அந்த புருஷா மிருகத்தைப் பிடித்து வர, வடதிசை நோக்கிச் சென்றனர். பஞ்சபாண்டவர்கள் புருஷாமிருகத்தைப் பிடிக்க முயல்கைளில், அது இவர்களை கடுமையாகத் தாக்கியது.

கோயில் வெளித்தோற்றம்

அதனால் இவர்கள் பயந்து திருமணிமுத்தாற்றங்கரையில் ஓடிவரும்போது, தருமர் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அந்த மிருகம் அந்த லிங்கத்தைக் கண்டதும், சிவ பக்தியால் அது சிவலிங்கத்தை சுற்றி வந்து வழிபட்டது. இதனால் அந்த மிருகத்திடமிருந்து தப்பிக்க, திருமணிமுத்தாற்றங்கரையில் ஒன்றன்பின் ஒன்றாக பஞ்சபாண்டவர்கள் அனைவரும் லிங்கங்களை லிங்கப்பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

பைரவர்

அந்த புருஷாமிருகமும் ஒவ்வொரு லிங்கமாய் சுற்றிவந்து வழிபட்டதில் அதன் கோபம் தணிந்தது. இந்த சம்பவம் நடைபெற்ற மாவுரெட்டி என்ற ஊரில் உள்ள சிவலிங்கம் பஞ்சபாண்டவர்களில் பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டதால் இக்கோயிலுக்கு, ‘பீமேஸ்வரர் கோயில்’ என்று பெயர் பெற்றது.

இத்தல ஈசனை வணங்கி வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம். அதேபோல், பஞ்ச காலத்தில் இக்கோயில் பீமேஸ்வரரை வழிபட்டால் நல்ல மழை பொழிந்து பஞ்சம் விலகும் என்பது நம்பிக்கை.

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT