ஆன்மிகம்

சுவர்ணலட்சுமியை வீட்டில் தங்கவைக்கும் சந்தனக்கட்டை!

பொ.பாலாஜிகணேஷ்

ணத்திற்கு ஈடாக நாம் மதிக்கக் கூடிய ஒரு பொருள் என்றால் அது தங்கம்தான். இன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே செல்வதால் பலருக்கும் அது எட்டாக்கனியாக இருக்கிறது. அப்படிப்பட்ட தங்கத்திற்கு அதிபதியாக விளங்கக்கூடியவள் சுவர்ணலட்சுமி. சுவர்ணலட்சுமியை நம் வீட்டில் தங்க வைக்கும் ஆற்றல் சந்தனக்கட்டைக்கு உள்ளது. அது குறித்த தகவல்களைத்தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்.

ஆன்மிக ரீதியாக தங்கத்திற்கு சமமாகக் கருதப்படுவது சந்தனம். பொதுவாக, அனைத்து தெய்வீகக் காரியங்களிலும் சந்தனம் இடம்பெறாமல் இருக்காது. சந்தனத்திற்கு அவ்வளவு மகத்துவம் இருக்கிறது. இன்றளவும் பல கோயில்களில் சந்தன மரக்கட்டையை உபயோகப்படுத்தி இழைத்தே தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட சந்தன மரக்கட்டையை நாம் எந்த வகையில் பயன்படுத்தினால் நம் வீட்டில் தங்கம் அதிக அளவில் சேரும் என்பதைப் பார்ப்போம்.

பொதுவாக, சந்தனம் என்று சொன்னதும் பலருக்கும் சந்தன வில்லைகள், சந்தன பொடிகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், அதையும் தாண்டி சுத்தமான சந்தன மரக்கட்டையை வாங்கி நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிப்பட மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாகக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சந்தன மரக்கட்டையை நம் வீட்டு வாசலில் கட்டி தொங்கவிடுவதன் மூலம் ஸ்வர்ணலட்சுமி நம் வீட்டிற்குள் எளிதாக வந்துவிடுவாள் என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், வீட்டின் படுக்கை அறையிலோ அல்லது வீட்டின் எந்த அறைகளில் வேண்டுமானாலும் இந்த சந்தன கட்டையை நாம் வைப்பதன் மூலம் வீட்டில் அஷ்ட லட்சுமிகளின் அருளும் பரிபூரணமாகக் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது.

மேலும், சந்தன மரக்கட்டைகளை யாகம் செய்யும்பொழுது யாகத்தில் போட்டு எடுத்து வந்து வீட்டு பூஜை அறையில் வைத்தோம் என்றால் அதன் சக்திகள் பல மடங்காக அதிகரித்து நம் வீட்டில் என்றுமே ஸ்வர்ணம் நிலைத்து இருக்கும் என்று கூறப்படுகிறது. வீட்டில் எந்தளவுக்கு சந்தனத்தை நாம் உபயோகப்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு வீட்டில் ஒருவித பரிசுத்தமான நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

சுக்ர ஹோரையில் சந்தனப் பொடியை வைத்து மகாலட்சுமி தாயாருக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாகக் கிடைத்து சுவர்ணலட்சுமி அங்கு நிரந்தரமாக குடியேறுவாள் என்றும் கூறப்படுகிறது. சந்தன திலகத்தை நாம் தினமும் நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் புதன் பகவானின் அருளும் நமக்கு பரிபூரணமாகக் கிடைத்து, பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் என்றும் கூறப்படுகிறது.

சூப்பர் டேஸ்ட்டான மதுரா பச்சடி மற்றும் முட்டை மலாய் மசாலா செய்யலாம் வாங்க!

Walt Disney Quotes: வால்ட் டிஸ்னியின் 15 சிந்தனை வரிகள்!

கார்ட்டூன் வடிவில் ஆங்கிலப் பாடம்! கைக்கொடுக்கும் ‘கரடி பாத்’ (Karadi Path) நிறுவனம்!

Are you an Animal lover? Then this is for you!

ருசித்து மகிழ விதவிதமான 3 வகையான புட்டுகள்!

SCROLL FOR NEXT