Temple 
ஆன்மிகம்

மர்மங்கள் நிறைந்த சாயா சோமேஸ்வரர் கோவில்!

பாரதி

இந்தியாவில் பல மர்மங்கள் நிறைந்த கோவில்கள் மன்னர் காலங்களில் கட்டப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு முக்கியமான கோவில்தான் சாயா சோமேஸ்வரர் கோவில்.

விஞ்ஞானிகளால் கூட கண்டேபிடிக்க முடியாத அளவிற்கும், எப்படி அந்தக் காலத்து கட்டட கலைஞர்கள் இப்படி கட்டிருப்பார்கள் என்று இன்றைய கலைஞர்களால் கண்டே பிடிக்க முடியாத அளவிற்கும் மர்மங்கள் நிறைந்த கோவில்கள் பாரத நாட்டில் ஏராளம் உள்ளன.

அவற்றில் ஒன்றுதான் ஹைத்ராபாத்திலிருந்து சுமார் 100 கிமீ தொலைவில் இருக்கும் சாயா சோமேஸ்வரர் கோவில். 10ம் நூற்றாண்டில் கன்டூர் சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் ஃ வடிவில் மூன்று கருவறைகள் உள்ளன. அந்த மூன்று கருவறைகளிலும் மூன்று விதமான மர்ம நிழல்கள் உள்ளன.

பிரம்மா கருவறை:

இந்த கருவறைக்கு எதிரில் ஒருவர் நின்றால் அவர் தன்னுடைய நான்கு நிழல்களை பார்க்க முடியும். எப்படி ஒரு உருவத்திற்கு நான்கு நிழல்கள் விழுகிறது என்பது யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

லிங்க கருவறை:

இந்த கருவறைக்கு எதிரில் ஒருவர் நின்றால் அவரது நிழல் எப்பொழுதும் அவருக்கு எதிர் திசையிலே விழும். நிழல் எப்படி எப்போதும் எதிர் திசையிலே விழுகிறது என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே இன்று வரையிலும் உள்ளது.

லிங்க கருவறை:

இங்குள்ள லிங்கத்திற்கு பின்புறம் ஒரு தூணின் நிழல் விழுகிறது. நிழலில் என்ன அதிசயம் என்றால், காலை முதல் மாலை வரை அந்த நிழல் நகர்வதே கிடையாது. அதோடு இரவு நேரத்தில் கூட அந்த நிழல் மறைவதே கிடையாது. பொதுவாக சூரியன் நகர நகர நிழலும் நகர்ந்து கொண்டே தான் போகும் அது தான் உலகின் நியதி. அனால் இங்கு சூரியன் உதிப்பதில் இருந்து அந்தி மறையும் வரை அந்த நிழல் நகராமல் ஒரே இடத்தில உள்ளது. மேலும் இந்த கருவறைக்கு முன்பு நான்கு தூண்கள் உள்ளன.

ஆனால் கருவறையில் விழும் நிழல் எந்தவொரு தூணிற்காக உருவானது என்று கண்டறியவே முடியவில்லை. எந்த தூணிற்கு பக்கத்தில் நாம் நின்று பார்த்தாலும் தூணின் நிழல் மட்டுமே கருவறையில் விழுகிறதே தவிர நமது நிழல் தரையில் விழுவதில்லை.

சாயா என்றால், நிழல் என்று பொருள். நிழல்கள் அடிப்படையில் மர்மம் நிறைந்த இக்கோவிலுக்கு இதனால்தான் சாயா சோமேஸ்வரர் கோவில் என்று பெயர் வந்தது. இக்கோவிலில் உள்ள கடவுளை 'நிழல்களின் தெய்வம்' என்று மக்கள் போற்றுகிறார்கள்.

ஒரே நாளில் மூன்று விதமான கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்!

ஃபேஸ்பேக்கை நீண்ட நேரம் முகத்தில் வைத்திருப்பீர்களா? போச்சு!

உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் 4 வகையான விஷப்பாம்புகள்!

60 வயதுக்குப் பின்னர் நிம்மதியாக வாழ வேண்டுமா? இதை முதல்ல படிங்க!

உலகின் 5 நீளமான நதிகள்!

SCROLL FOR NEXT