ஆன்மிகம்

உலகின் மிகப்பெரிய பறவைச் சிற்பம்!

இந்திராணி தங்கவேல்

ன்னை சீதா தேவியை அசுரன் ராவணன் கடத்திச் செல்கையில், அவனை வழிமறித்த ஜடாயு பறவை அவனோடு சண்டையிட்டது. அந்த சண்டையில் ஜடாயு பறவையின் ஒரு பக்க இறக்கையை தனது வாளால் வெட்டி வீழ்த்தினான் ராவணன். ராமாயணக் காவியத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது ஆந்திர மாநிலத்தில் உள்ள லெபாக்ஷி என்று கூறப்பட்டாலும், இது தொடர்பான மாறுபட்ட கருத்துக்களும் நிலவுகின்றன.

கேரள மாநிலம், கொல்லம் நகரில் இருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஜடாயுமங்கலம். இயற்கை எழில் சூழ்ந்த இந்த மலைப்பகுதியில் 1200 அடி உயரத்தில் இருக்கிறது ஜடாயு பாறை. சீதையை மீட்பதற்காக தன்னை எதிர்த்து சண்டையிட்ட ஜடாயுவின் இறக்கையை ராவணன் வெட்டி வீழ்த்தியதும், அதைத் தொடர்ந்து ஜடாயு பறவையினால் பறக்க முடியாமல் கீழே ஒரு பெரிய பாறையில் விழுந்ததாகவும், அந்த இடம்தான் ஜடாயு பாறை என அழைக்கப்படுவதாகவும் மற்றொரு கருத்தும் நிலவுகிறது. சீதா தேவியைத் தேடி அங்கு வரும் ஸ்ரீராமரிடம், இலங்கை வேந்தன் ராவணன் சீதையை தென்திசை நோக்கி கடத்திச் சென்றதாக ஜடாயு கூறியதாக செவி வழிக் கதைகள் இங்கும் சொல்லப்படுகின்றன.

ஜடாயு பறவை இங்கு பாறையில் விழுந்து உயிர்நீத்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில், பறந்து விரிந்த அந்தப் பாறையில் 200 அடி நீளம் 150 அடி அகலம் 70 அடி உயரத்தில் 15000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான ஜடாயு சிற்பம் ஒன்று தத்ரூபமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. உலகிலேயே இதுதான் மிகப்பெரிய பறவை சிற்பம் ஆகும். 'ஜடாயு இயற்கை பூங்கா' என்ற பெயரில் இது முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. இதை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி திறந்து வைத்தார். பாறையின் உச்சிக்குச் சென்று ஜடாயு சிற்பத்தை கண்டு களிக்க ரோப் கார் வசதி உள்ளது. ஜடாயு பாறையில், சற்று குழிவான ஓர் இடத்தில் ஸ்ரீராமரின் பாதம் என அடையாளம் காட்டப்பட்டு இருக்கிறது.

"பயிற்சி செய் அல்லது செத்து மடி": ப்ரூஸ் லீயின் அறிவுரை!

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

SCROLL FOR NEXT