தமிழ்நாட்டில் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய அழகிய, கலை நுணுக்கங்களை உடைய 3 பழமையான அரண்மனைகளைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாக காண்போம்.
1.Maratha Palace.
தஞ்சாவூரை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களால் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனை பிற்காலத்தில் மராத்தியர் ஆட்சிக்கு கீழே வந்தது. இந்த அரண்மனையில் இருக்கும் ஓவியங்கள் பார்ப்பதற்கு ரொம்பவே அழகாக இருக்கும். தஞ்சாவூர் கோவிலில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலே அமைந்துள்ள இந்த அரண்மனை பெரிய மதில்களை கொண்டு இன்றும் அழகாக காட்சியளிக்கிறது. இந்த அரண்மனை தமிழ்நாட்டு மக்களால் ‘தஞ்சாவூர் அரண்மனை’ என்று அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு சென்றால் கண்டிப்பாக Saraswathi mahal library museum மற்றும் Art Gallery ஐ தவறாமல் பார்த்துவிட்டு வருவது சிறப்பு. மாடமாளிகை, சரபோஜி ராஜா நினைவு மண்டபம், கோபுரம் ஆகியவற்றின் அழகைக் கண்டு ரசிக்கலாம். சிற்பங்கள், ஓவியங்கள், கலைநயம் பொருந்திய திராவிட கட்டிடக்கலை என்று இந்த அரண்மனையின் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம்.
2. Thirumalai Nayakkar Mahal.
மதுரையை ஆட்சி செய்துக்கொண்டிருந்த திருமலை நாயக்கர் என்னும் மன்னரால் 1635 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அரண்மனை அதன் கட்டிடக்கலைக்கு மிகவும் புகழ் பெற்றதாகும். அதிலும் இந்த அரண் மனையில் இருக்கும் தூண்கள் பிரம்மாண்டமாகவும், அழகாகவும் இருக்கும். இந்த அரண்மனையில் உள்ள அழகிய ஓவியங்களும், சிற்பங்களும் பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும். இந்த அரண்மனையை ஸ்வர்க விலாசம், ரங்க விலாசம் என்று இரண்டாக பிரிக்கலாம். நாயக்க மன்னனின் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனம் இன்னும் இங்கே பாதுகாக்கப்படுகிறது. இந்த அரண்மனை தற்போது தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது.
3. Chettinad Palace.
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கானாடுகாத்தன் என்ற ஊரில் உள்ள இந்த அரண்மனை அதன் அழகான வேலைப்பாடுகளுக்காக மிகவும் பிரலமாகும். இந்த அரண்மனை மன்னர்கள் காலத்தில் கட்டப்படவில்லை என்றாலுமே இந்தப் பகுதி மக்கள் எல்லாருமே இதை அரண்மனை என்றே சொல்கிறார்கள். இந்த அரண்மனையை 1912 ல் அண்ணாமலை செட்டியார் வடிவமைத்து உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அரண்மனையை பளிங்கு கற்களை கொண்டும், பர்மா தேக்கை கொண்டும் அழகாக வடிவமைத்துள்ளது பார்ப்போரின் மனதைக் கவரக்கூடியதாக இருக்கும். இந்த அரண்மனையை ‘கானாடுகாத்தான் அரண்மனை’ என்றும் இங்குள்ள மக்கள் அழைக்கிறார்கள். இந்த 3 அரண்மனைகளில் உங்களை மிகவும் கவர்ந்தது எதுவென்று சொல்லுங்க பார்க்கலாம்.