Bangkong, Thailand Adobe Stock
பயணம்

சென்னையிலிருந்து தாய்லாந்திற்குச் செல்ல இவ்வளவு பணம் இருந்தால் போதுமா?

பாரதி

நிறைய தீவுகள், மலைகள், அடர்ந்தக் காடுகள், பெரிய பெரிய நகரங்கள் ஒருங்கே காணப்படும் ஒரு இடம் தாய்லாந்து. தாய்லாந்தின் இயற்கையும் கலாச்சாரமும் உங்களை சுவாரசியமாகவும் உற்சாகமாகவும் வைத்துக்கொள்ளும். அந்தவகையில் தாய்லாந்து செல்வதற்கு எவ்வளவு செலவாகும் எனவும் எந்தெந்த இடத்திற்கெல்லாம் கட்டாயம் செல்ல வேண்டும் என்றும் பார்ப்போம்.

சென்னையிலிருந்து தாய்லாந்து:

சென்னையிலிருந்து தாய்லாந்து செல்வதற்கான விமானம் பேங்காக்கில் உள்ள ஸ்வர்ணபூமி விமான நிலையத்தில் தரை இறங்கும். நீங்கள் தாய்லாந்து செல்ல திட்டம் போட்ட உடனே எப்போதெல்லாம் சென்னையிலிருந்து விமானம் கிளம்புகிறது என்று தெரிந்துக்கொண்டு, முன்பதிவு செய்துக் கொள்வது அவசியம். அதற்கான பல வலைத்தளங்கள் ஆன்லைனில் இருக்கும்.

சென்னையிலிருந்து பேங்காக்கில் உள்ள ஸ்வர்ணபூமி விமான நிலையத்திற்கு 20 விமானங்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும்தான் நேரடி விமானம் இருக்கும். மற்ற நேரங்களில் சென்னையிலிருந்து மும்பை அல்லது புனே விமான நிலையத்திற்கு சென்று பேங்காக் விமான நிலையம் செல்லும்படி இருக்கும். சென்னையிலிருந்து தாய்லாந்து செல்வதற்கு குறைந்தப்பட்சம் 11 மணி 55 நிமிடங்கள் ஆகும். அதேபோல் 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை விமானக் கட்டணம் இருக்கும்.

Wat pho temple

பேங்காக்கில் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. அதேபோல் கடைவீதிகளுக்கும் மால்களுக்கும் பஞ்சமே இல்லை. பழமை வாய்ந்த புத்தர் கோவிலான வாட் போவிற்கு (Wat pho) கட்டாயம் சென்று பார்க்க வேண்டும். பேங்காக்கில் பூங்காக்கள், சவாரிகள் அதிகம் உள்ளன. ஆகையால் அந்த இடத்தில் இரண்டு நாள் முழுவதும் சுற்றிப்பார்க்கலாம்.

Khao yai national park

மேலும் புக்கெட் கடற்கரை (Phuket beach), கோ சா முயி (Koh saa mui beach), க்ராபி (Krabi) ஆகிய கடற்கரைகளுக்கு செல்லலாம். பி பி தீவு (phi phi island), காயோ யாய் தேசிய பூங்கா (Khao Yia national park) சாட்டுச்சாக் சந்தை (Chatuchak market), லும்பினி பூங்கா (Lumphini park), இராவண் சிலை, ப்ரா ப்ரோமின் தங்க சிலை (Phra phrom), பிரபல பூ சந்தைகளைச் சுற்றிப்பார்க்கலாம். மேலும் வாட் மஹதாத் என்ற தியானம் செய்வதற்கான இடத்திற்கு சென்று தியானம் செய்யலாம்.

Erawam shrine

தாய்லாந்தில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு 2,500 ரூபாயிலிருந்து 4,500 ரூபாய் வரை ஆகும். முன்பெல்லாம் தாய்லாந்திற்கு விசா பயன்படுத்தி செல்ல 3000 ரூபாய் வரைச் செலவாகும். ஆனால் இப்போது அந்நாட்டிற்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டின் அரசு அறிவித்ததால் அந்த செலவு மிச்சமாகும்.

சில இடங்களுக்கு மட்டுமே அனுமதி கட்டணம் தேவைப்படும். இவையனைத்தையும் சேர்த்து ஒரு லட்சம் கையில் இருந்தால் போதும் தாய்லாந்திற்கு திருப்தியாகச் சென்று வரலாம். இதுப்போக உங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்கும்போது சற்று கூடுதல் தொகையை பாதுகாப்பிற்கு வைத்துக்கொள்வது நல்லது.

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT