அருவிகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது குளுமையான நீரும், அதைச் சுற்றியுள்ள இயற்கை காட்சிகளும்தான்.
அருவிகள் காடுகளின் மையத்தில் பசுமைகள், பாறைகள் மத்தியில் அருவிகள், மலைகளில் பல மூலிகை மரங்களையும், செடிகளையும் உரசி வருவதால் அருவிகள் மருத்துவ குணம் நிறைந்தது. நோய்களை குணமாக்கும் தன்மை அருவிகளுக்கு உண்டு.
ஆனால் இங்கே ஒரு ஊரில் கொட்டும் அருவி அருகில் சென்றாலே காது செவிடாகும். இப்படி ஒரு அருவி இருப்பது வியப்பாக உள்ளதா? அந்த அருவியைப்பற்றிய சிறப்பு என்ன பார்ப்போமா.
சிர்சி
பெங்களூருவிலிருந்து சுமார் 430 கி.மீ தொலைவில் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ளது சிர்சி நகரம்.
கெப் பாஜாக்
சிர்சியிலிருந்து 30 கி.மீ தொலைவில் உஞ்ச்சலி அருவி எனும் அழகிய அருவி உள்ளது. இந்த அருவிக்கு கெப்பா ஜாக் என்ற சிறப்பு பெயர் உண்டு. கெப்பா ஜாக் என்றால் 'காதை செவிடாக்கும் ஒலி' எழுப்பும் அருவி என்று பொருளாகும்.
ஆனால் இந்த அருவியின் சுற்றுப்புறமும், அருவி கொட்டும் ஓசையின் அழகும் நம் ஆழ்மனதை அமைதியக்கச் செய்யும்.
அத்தனை அற்புதங்களை இந்த உஞ்ச்சலி அருவி பெற்றுள்ளது. சிர்சி அருகில் உள்ள தோனி ஹாலா வனப்பகுதியில் இருந்து,
சிர்சியின் மலை குன்றுகளைக் கடந்து சிறப்பு வாய்ந்த பல அழகிய அருவிகளாக கொட்டுகிறது. சிர்சியில் தவறாமல் பெய்யும் பருவ மழையும், வளமான வெப்ப மண்டல காடுகளும்தான் வருடம் முழுவதும் இங்கே அருவி வற்றாமல் இருக்க காரணம்.
இதனால் எந்தக் காலங்களிலும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
அருகில் உள்ள சுற்றுலாத்தலங்கள்;
சகஸ்ரலிங்கம்
சிர்சியிலிருந்து 10 கி.மீ தொலைவில் ஷால் மலா நதிக்கரையில் அமைந்துள்ளது சகஸ்ரலிங்கம். இங்கு மகாசிவராத்திரி நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த சிவலிங்கங்களை தழுவிச் செல்லும் நீரோடையின் பேரழகைக் காண கிடைக்காத அம்சமாகும்.
திரிகூடேஷ்வர கோவில்
கடக்கில் காணப்படும் அற்புதமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று திரிகூடேஷ்வர கோவில். கட்டிடக் கலை, சிற்பக்கலை, ஆன்மீக அம்சங்களும் இங்கு அதிக அளவில் காணப்படுகின்றன.
சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய கடவுள்களுக்கான கோவில்கள் இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.
தங்க நிற கடற்கரை
கார்வார் துறைமுகம் பக்கத்தில் உள்ளது. இங்கு மீன் பிடி தொழிலும், சுற்றுலாவும் முக்கியமானது. தூய்மையுடன் தங்க நிறத்தில் ஜொலிக்கும் கடற்கரை அதைச் சுற்றியுள்ள தென்னை மரங்கள் சூழ்ந்த இயற்கை அழகு சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்க்கும்.
சிர்சிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் கும்தா ரயில் நிலையம் ஆகும். அங்கிருந்து வாடகை கார், பேருந்துகள் மூலம் சிர்சி, உஞ்ச்சலி அருவி அடையலாம். ஹீப்ளி விமான நிலையம் அருகில் உள்ளது. சுற்றுலா சென்று இந்த அருவியை கண்டு கழித்து வாருங்கள்.