இளைஞர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்று கனவுகாணும் ஒரு இடம்தான் பாண்டிச்சேரி. பாண்டிச்சேரியில் பார்க்க வேண்டிய இடங்கள் பல இருந்தாலும், இந்த நீர் விளையாட்டுகளில் விளையாடுவது என்பது அனைத்தையும் விட மிக மிக உற்சாகமளிக்கக் கூடிய ஒன்று. அந்த வகையில் பாண்டிச்சேரியில் மிகவும் பிரபலமான நீர் விளையாட்டுகள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
இது அலைகளில் சர்ஃபிங் போர்ட் வைத்து சர்க்கஸ் போன்று விளையாடும் விளையாட்டு. முதலில் சர்ஃபிங் செய்பவர்களுடன் பயிற்சியாளர்களும் செல்வார்கள் என்பதால் எந்த பயமும் இல்லை. பாண்டிச்சேரியில் முக்கால் வாசி கடற்கரைக்கு அருகில் இருக்கும் கடைகளில் சர்ஃபிங் செய்ய வேண்டிய பொருட்கள் விற்கப்படும். பாண்டிச்சேரியில் உள்ள பாரடைஸ் பீச் சர்ஃபிங் செய்வதற்கு பிரபலமானது. ஒரு மணி நேரத்திற்கு 300 ரூபாய் கட்டணம்.
ஸ்கூபா டைவிங் பாண்டிச்சேரியில் மிகவும் பிரபலமான விளையாட்டு. ஸ்கூபா டைவிங்கிற்கு தரப்படும் ஆடையைப் போட்டுக்கொண்டு கடலுக்குள் சென்று மீன் வகைகள் மற்றும் கடலுக்கு அடியில் இருக்கும் அனைத்தையும் பார்க்கலாம். வங்க கடலில் ஸ்கூபா டைவ் செய்வது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இது Temple adventure centre ல் உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 500 ரூபாய் கட்டணம்.
கயாக்கிங் ஒரு பழமை வாய்ந்த விளையாட்டு ஆகும். கயக் தோனிகள் “வேட்டையாடுபவர்களின் தோனி” என்று அழைப்படுகிறது. முன்னதாக இந்த தோனி மரம் மற்றும் விலங்குகளின் தோல்கள் மூலம் செய்யப்பட்டது. கடலில் இந்த தோனியில் பயணம் செய்வது மிக மிக அற்புதமான அனுபவமாக இருக்கும். மேலும் வேகமான அலைகளிலும், அமைதியான கடலிலும் இந்த தோனியில் பயணம் செய்து கடலை ரசிக்கலாம். ஒரு நாள் முழுவதும் தின்பண்டங்கள், உணவுகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சுற்றலாம். இதற்கான கட்டணம் 1000 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது.
இது கடலின் பரப்பளவை மேலிருந்து பார்க்கும் விளையாட்டு. அதாவது ஒரு நபரை தோனியில் மூலம் கடலுக்குள் சென்று அங்கிருந்து ஒரு பலூனில் கட்டி வானில் தூரம் பறக்கவிடுவார்கள். இது கடலின் அழகைப் பார்த்து ரசிக்க எற்ற ஒரு விளையாட்டு. ஒரு பயிற்சியாளரும் உடன் வருவார்கள். குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத நேரங்களில் இந்த விளையாட்டை விளையாடலாம். மேலும் பாண்டிச்சேரியில் உள்ள பாரடைஸ் கடற்கரையில் ஒரு மணி நேரத்திற்கு 800 ரூபாய் கட்டணத்தில் விளையாடலாம்.
Wind surfing அமைதியான நீரிலும் செய்யலாம் அல்லது வேகமான அலைகளிலும் செய்யலாம். விளையாட்டு உற்சாகமாக இருக்குமா என்பதைக் காற்றே தீர்மானிக்க வேண்டும். இந்த விளையாட்டை முதலில் முறையாகப் பயிற்சி எடுத்த பின்னரே விளையாட வேண்டும். இதற்கான பயிற்சி மையம் பாண்டிச்சேரியில் அதிகம் உள்ளன. இதுவும் பாரடைஸ் கடற்கரையில் ஒரு மணி நேரத்திற்கு 600 ரூபாய் ஆகும்.