திருப்பதி கோயில்
திருப்பதி கோயில் 
தீபம்

திருப்பதியில் தரிசனத்திற்காக 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!

கல்கி டெஸ்க்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப் பட்டதாலும் , பள்ளிகள் திறப்பு தள்ளி போவதாலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப் படுகிறது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல்லாயிக்கணக்கானோர் தினசரியும் திருப்பதி வந்து செல்கின்றனர். பல மணி நேரம் கால் கடுக்க காத்திருந்து சில நிமிட நேரம் தரிசனம் செய்தாலும் மன திருப்தியுடன் செல்கின்றனர் பக்தர்கள் திருப்பதியில் இன்று நேரடி இலவச தரிசனத்தில் இன்று வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் நிரம்பியது. பக்தர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் தரிசன நேரம் அதிகரித்துள்ளது. இலவச தரிசனத்தில் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் 31 அறைகளும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இன்று காலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 5 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு இலவச தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 8 மணி நேரமும், நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் நேற்று 87,434 பேர் தரிசனம் செய்தனர். 39,957 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

கசிந்தது ராமாயணம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

சர்க்கரை நோயை சமாளிப்பது எப்படி? வாழ்நாள் முழுவதும் சிகிச்சை செய்து கொள்ளணுமா?

கோடையை சமாளிக்க பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

மிக்ஜாம் புயலின் வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.276 கோடி ஒதுக்கிய மத்திய அரசு!

சின்னம்மை அபாயம்… தடுப்பு & முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! 

SCROLL FOR NEXT