Do you know who asked the boon of Shiva to 'become a demon'? Image Credits: Maalaimalar
தீபம்

'பேயாக மாற வேண்டும்' என்று சிவனிடம் வரம் கேட்டவரைத் தெரியுமா?

நான்சி மலர்

சிவபெருமானைக் காண வேண்டும், அவரிடம் வரங்கள் பெற வேண்டும் என்று எண்ணற்ற பக்தர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால், ஒருவர் சிவனிடம் தான் பேயாக வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார் என்று சொன்னால் நம்பமுடிகிறதா?அந்த கதையைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

புனிதவதி காரைக்காலில் பிறக்கிறார். இவர் சின்ன வயதிலிருந்தே சிவபெருமானின் மீது சிறந்த பக்தியில் இருக்கிறார். நாகப்பட்டினத்தில் உள்ள பரமதத்தன் என்ற வணிகனை திருமணம் செய்துக்கொள்கிறார்.

ஒருசமயம் இவர் சிவனின் அருளால் பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டுகிறார். அதிலிருந்து இவருடைய திருமண வாழ்க்கையில் பிரச்னை ஏற்படுகிறது. ‘இவள் சாதாரண பெண் இல்லை. தெய்வத்தன்மை வாய்ந்தவள். இவளுக்கு நான் கணவனாக இருக்கக்கூடாது’ என்று பரமதத்தன் புனிதவதியை விட்டுவிட்டு போய்விடுகிறார்.

இவரும் கணவனை எங்கெங்கோ தேடிய பிறகு பல வருடம் கழித்து மதுரையில் பார்க்கிறார். அங்கே அவருக்கு இன்னொரு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது. இதைவிட கொடுமை அந்த பெண் குழந்தைக்கு புனிதவதி என்று இவள் பெயரையே வைத்திருக்கிறான் பரமதத்தன். மீளமுடியாத அதிர்ச்சியில் இருந்த புனிதவதிக்கு மேலும் அதிர்ச்சியாய் அவருடைய கணவனே அவளின் காலில் விழுந்து வணங்குகிறான். புனிதவதி அவரை கணவனாக பார்க்க, கணவனோ இவரை தெய்வமாகப் பார்க்கிறான்.

இனி அவருடன் விவாதிப்பதில் எந்த பயனுமில்லை. இனி என் உடலாலும், அழகாலும் எந்த பயனும் இல்லை. எனக்கு பேயுருவம் கொடுங்கள் என்று சிவனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். சிவனும் அவருக்கு பேய் உருவம் கொடுக்கிறார். இங்கிருந்து கைலாயம் வரை போகிறார். கைலாயமலையின் புனிதத்தை உணர்ந்து தலையாலேயே நடந்து செல்கிறார். இவரின் பக்தியை பார்த்த சிவனே இவரை ‘அம்மா’ என்று அழைக்கிறார். அவர்தான் காரைக்கால் அம்மையார். மொத்தம் 63 நாயன்மார்கள் உள்ளனர். அதில் மூன்று பேர்தான் பெண்கள். அதில் காரைக்கால் அம்மையாரும் ஒருவராவார்.

காரைக்கால் அம்மையாரிடம் சிவபெருமான் என்ன வரம் வேண்டும்? என்று கேட்டபோது, ‘பிறவாமை வேண்டும். அப்படியே பிறந்தாலும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் வேண்டும்’ என்று வேண்டினார். பிறகு ஆலங்குடி வந்து மூத்த திருப்பதிகம் பாடினார் அம்மையார். மன்னர் ஒருவர் கனவில் வந்த சிவபெருமான் தன் சன்னதிக்கு பின்புறம் காரைக்கால் அம்மையாருக்கு சன்னதி எழுப்பக் கூறினார். அங்கே காரைக்கால் அமையார் ஐக்கியமானார். அவர் அங்கிருந்து சிவபெருமானின் தாண்டவத்தை ரசிப்பதாக ஐதீகம்.

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!

இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி குளிர்ந்த நீரில்தான் குளிப்பீங்க! 

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

SCROLL FOR NEXT