தீபம்

சபரிமலை யாத்திரை... சில தகவல்கள்!

மகாலெட்சுமி சுப்ரமணியன்

பரிமலை யாத்திரை செல்லும் போது தெரிந்து கொள்ள வேண்டிய சில வார்த்தைகள்,பூஜைகள் பற்றி, சாமி தரிசனம் பற்றி...

ஆழி பூஜை: மண்டல பூஜைக்கு சபரிமலை செல்லும் பக்தர்கள் இரவில் நடத்தும் பூஜை.

உதயாஸ்தமன வழிபாடு: சன்னிதானத்தில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடக்கும் வழிபாடு.

கனகாபிஷேகம்: களபம் என்பது சந்தனத்தைக் குறிப்பது.தை மாதத்தில் பந்தள ராஜனின் முன்பு நடத்தப்பட்ட விசேஷ திருமஞ்சனம்.

நையாட்டுவிளி: உற்சவ தினங்களில் பதினெட்டாம் படிக்கு அருகில் தர்மசாஸ்தாவின் அருளைப் பற்றிக் கூறுகிற கதை சொல்லும் நிகழ்ச்சி.

பறக்கொட்டிப் பாட்டு: தோஷங்கள் விலகுவதற்காக மாளிகை புரத்து அம்மன் ஆலயத்தில் உடுக்கடித்துக் கொண்டு ஆடிப்பாடி நடக்கும் வழிபாடு.

நீலிமலை: மலைப் பயணத்தின்போது வழியில் பம்பா நதிக்கு அப்பால் தெரியும் மலைக்குப் பெயர்.

பம்பா விளக்கு: பம்பா சத்யா என்னும் பூஜை நிறைவுற்றதும் பக்தர்கள் அனைவரும் ஆடிப் பாடியபடி நதியில் விளக்குகளுடன தெப்பம் மிதக்க விடுகிற நிகழ்ச்சி.

பெருநாடு: ஐயப்பனின் திருவாபரணங்கள்அணிவிக்கப் படுகின்றன. முக்கிய ஐயன் சன்னதி உள்ள இடம்.

பொன்னம்பலமேடு: தை முதல் தேதியான மகர சங்கராந்தி அன்று பொன்னம்பலமேடு என்னும் இந்த இடத்தில் தான் மாலை ஆறு மணிக்கு மகர ஜோதி தெரியும்.

பஞ்சவாத்தியம்: ஐயப்பனுக்கு பிடித்தமான திமிலை, மத்தளம்,கொம்பு,சங்கு,தாளம் ஆகிய ஐந்து விதமான வாத்தியங்கள்.

சபரி பீடம்: சபரிமலை என்ற பெயர் வருவதற்கு காரணமான சபரி என்ற பெண்மணி தவமிருந்த இடம்.

சரங்குத்தி: முதல் தடவையாக மலைக்கு வரும் கன்னி சாமிகள், சரக்கோலை குத்தி வைக்கும் இடம்.

மாளிகைபுரத்து அம்மன்: ஐயப்பனுக்கு மணமாலை அணிவிக்க கன்னி ஐயப்பமார்கள் வராத நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அம்மன்.

கொச்சுகடுத்தர்: ஐயப்ப சுவாமியின் காவல் தெய்வங்களில் ஒருவராக விளங்குபவர்.

அம்பலப்புழா சங்கம் : மகரஜோதி விழாவை நடத்துவதற்காக எருமேலி சாஸ்தா கோவிலில் வேட்டைத் துள்ளல் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும் குழு.

சபரி பீடம்: அடர்ந்த காட்டுப் பகுதியில் பயணம் செய்யும் பக்தர்கள் ஓய்வெடுக்கும் இடம்.

கார்த்திகை ஒன்றாம் தேதியிலிருந்து விரதமிருந்து 48 நாட்களுக்குள் சென்று வீடு திரும்புவதை மண்டலம் என்றும் தை 1ம் தேதி சபரிமலையிலிருந்து மகரஜோதி காண நாள் கணக்கிட்டு சொல்வதை ஜோதி என்று குறிப்பிடுவது வழக்கம்.

நிதானமாக இருப்பதால் கிடைக்கும் லாபம் என்ன தெரியுமா?

NISAR - இஸ்ரோ - நாசா கூட்டு முயற்சியில் பேரிடர் கண்காணிப்பு செயற்கைக்கோள்!

துணிந்தாருக்கு துக்கம் இல்லை!

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க!

SCROLL FOR NEXT