தீபம்

பெண்களுக்கான‌ பிரத்யேகக் கோயில்.

மகாலெட்சுமி சுப்ரமணியன்

ருப்பை நோய்கள், மாதவிடாய் பிரச்னைகள் இன்று பல பெண்களின் தீராப் பிரச்னையாக உள்ளது. இப் பிரச்சினையைத் தீர்த்து சுகம்‌தரும் , அருள் தரும் ஆலயமாக திருச்சி அருகேயுள்ள பேட்டை வாய்த்தலை ஆலயம் உள்ளது.

இத்தல இறைவன் மத்யார் ஜீனேஸ்வரர் என்றழைக்கப் படுகிறார். இறைவியின் பெயர் பாலாம்பிகை. பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்யவும், குழந்தை பேறின்மையை நீக்கவும் மூன்றாம் குலோத்துங்கனுக்கு அசரீரி ஒன்று இட்ட கட்டளையின் விளைவாக தோன்றியதுதான் இக்கோயிலும், அதனருகே உள்ள தீர்த்தமும்.

பொற்றாளம் பூவாய் சித்தர்

ஆலய கருவறை நிர்மாணம் நிறைவடையும் நேரத்தில் மன்னரின் பிரம்மஹத்தி தோஷம் முழுவதும்‌ நீங்கியது. குழந்தை பாக்கியமும் கிட்டியது. இச் சம்பவத்தை நினைவுப்படுத்தும் வகையில் கோயில் மண்டப தென்பகுதியில் உள்ள தூணில் பிரம்மஹத்தி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்கன் வெட்டிய வாய்க்கால்தான் இப்போது உய்யக்கொண்டான் கால்வாய் என அமையப்பெற்று பாசனத்துக்கு உதவுகிறது.

இதே ஊரில் பொற்றாளம் பூவாய் சித்தர் என்பவர் வாழ்ந்துள்ளார். சித்த மருத்துவராக இருந்துள்ளார். அக்காலத்தில் இங்குள்ள பெண்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட நாளுக்கும் மேலாக மாதவிலக்கு ஏற்பட் டுள்ளதாம். சித்தர் பலவித மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லையாம். பிறகு இத்தலத்து இறைவி பாலாம்பிகை யைசித்தர் மனமுருகி வேண்ட, வரமளித்த அன்னை தனக்காக விரதமிருந்து தன்னை வழிபடும் பெண்களின் பிரச்னைகளும், வேதனைகளும் தீரும் வண்ணம் அருளினார். மாதாந்திர பிரச்னைகள் மட்டுமன்றி, கருப்பை கோளாறுகள், பெண்கள் சார்ந்த சிக்கல்களையும் தீர்த்து அன்னை நிவர்த்தி செய்கிறாள்.

சித்தர் இத்தலத்தில் இறைவனுடன் ஜோதி வடிவில் இணைந்துள்ளார். வடபுற தூணில் இவரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இறைவன், இறைவியை வழிப்பட்ட பின்னர் பெண்கள் தங்களுக்கான பிரச்னைகளை, குறிப்பிட்ட வயதுக்குப் பின்னரும் வயதுக்கு வராமை, குழந்தை பேறின்மை, கருப்பைக் கோளாறுகள் போன்றவற்றை பிரார்த்தனை சீட்டில் எழுதி சித்தரின் திருமேனி உள்ள தூணில் கட்டுகின்றனர். அதன் பிறகு இறைவன், இறைவி படத்தைப் பெற்று 7-9 வாரங்களுக்கு வெள்ளிக்கிழமை தோறும் ஒரு டம்ளர் பாலை வைத்து மனதார வேண்டி பூஜை செய்து வர, வேண்டுதல் பரிபூரணமாக நிறைவேறும் என்பது ஐதீகம் .

கீழ்கண்ட ஸ்லோகத்தை சொல்லி வழிபட நல்ல பலன் கிட்டும்.

பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதிசஜபேந் நாமத்ரயம் நித்யம் மஹா ரோக நிவாரணம்.

இத்தலம் திருச்சியிலிருந்து 25கி மீ தொலைவில் திருச்சி - கரூர் சாலையில் உள்ளது. நகரப் பேருந்துகள், ரயில் வசதியும் உண்டு. கோயில் காலை 7.00 - 11-30வரையிலும், மாலை 4 - 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT