கோகுலம் / Gokulam

யானையும் குழந்தையும்

கல்கி டெஸ்க்
gokulam strip

காடு பெருங்காடு – யானை புலி

காட்சி தரும் காடு

நீடு நிழல் கொடுத்தே – மரங்களும்

நின் றிருக்கும் காடு!

ச்சை மரத்தடியில் – சின்னஞ்சிறு

பாலன் படுத் திருந்தான்

குச்சி விற கொடிப்பாள் – அவன்தாய்

கூப்பிடு தூரத்திலே.

ண்ணயர் பாலகனின் – அருகிலோர்

காட்டு மத யானை

மண்ணைக் கிளறியது! – மதத்தொடு

வாலை முறுக்கி யது!

தாயும் பதறுகிறாள் – ஐயோவென்று

தவித்துப் புலம்புகிறாள்

வாயும் வயிற்றெரியக் – கண்ணீர்விட்டு

வாய்விட் டலறுகிறாள்.

ச்சை இளங்குழந்தை – தலைமயிர்

பாடிவரும் காற்றால்

நொச்சித் தளிர்போலே – அசைந்ததை

நோக்கிற்று யானையுமே.

கைகளைத் தட்டுகிறான் – குழந்தை

கால்களில் துள்ளுகிறான்

பைய நடக்கிறது – யானை அவன்

பக்கம் வருகிறது.

தீங்கெதும் செய்யவில்லை – குழந்தையைத்

தீண்டி மிதிக்கவில்லை!

பாங்குடன் அப்புறத்தே – நகர்ந்தது

பாசம் ததும்பிடவே,

றறி வில்லாத – மிருகமும்

அன்பினைக் காட்டுதடா!

மாறிவரும் உலகில் – மனிதா

வாழத் தெரிந்து கொள்வாய்!

 - சக்திக்கனல்

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT