கீழே சில குறிப்புகளும் அவற்றிற்கு அருகாமையில் அந்த குறிப்புக்கான ஒற்றைச் சொல்லின் எழுத்து எண்ணிக்கையும் (-) கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்புகளின் உதவியோடு சொற்களைக் கண்டுபிடியுங்கள்.
அதன் பின்னர் ஒவ்வொரு சொல்லில் இருந்தும் ஓர் எழுத்தை கவனமாகத் தேர்ந்தெடுத்து, வரிசைப்படுத்தி, ஒளிந்திருக்கும் பழமொழியைக் கண்டுபிடியுங்கள். (பழமொழி ஒரு விலங்கினை மையப்படுத்தியது.)
1. யானையின் பலம் கொண்ட உறுப்பு (5)
2. உழவுத் தொழில் செய்பவர்களின் வாழ்கையைப் பாடும் இலக்கியம் (3)
3. சுமை (2)
4. சூரியன் மறைவது மேற்கில்... உதிப்பது? (5)
5. ஞாபகமின்மையைக் குறிக்கும் சொல் (3)
6. பெண்கள் கழுத்தில் சூடுவது (2)
7. இது இல்லாமல் படகு ஓட்ட முடியாது (4)
8. காவிரி ஆறு என்பதன் வேறு சொல் (3)
9. வழக்குகளுக்குத் தீர்ப்பு சொல்பவர் (4)
10. நவகோளில் ஒன்றான ‘வெள்ளி’ கிரகம் என்பதன் வேறு சொல் (5)
11. மாப்பிள்ளை என்பதன் வேறு சொல் (5)
12. இந்தியாவில் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இடம் (3)
13. காளை மாடுகளுக்கு புகழ் பெற்ற ஊர் (5)
14. அனைவருக்குமானது (2)
விடை :
1. தும்பிக்கை
2. பள்ளு
3. பளு
4. கிழக்கில்
5. மறதி
6. மாலை
7. துடுப்பு
8. பொன்னி
9. நீதிபதி
10. சுக்கிரன்
11. மணமகன்
12. நாசிக்
13. காங்கேயம்
14. பொது
பழமொழி: துள்ளுகிற மாடு பொதி சுமக்காது