விரல் நுனியில் விரிகிறது... உலகச் செய்திகளை கொட்டுகிறது கூகுள் நியூஸ். நாம் கேட்கும் விபரங்களை வினாடியில் சொல்லுகிறார் கூகுளாண்டவர். இதையெல்லாம் மிஞ்சி இன்று இணைய உலகைக் கலக்கிக் கொண்டிருக்கிறது ஒரு தளம் / செயலி.
உங்கள் கேள்விகளுக்கு விடை தருகிறது. நீங்கள் ஏதாவதொரு விஷயத்தைப் பற்றிக் கேட்டால், விளக்கமாக பதில் தருகிறது.
உங்களுக்குத் தேவையான படத்தைப் பற்றி சில சொற்களில் சொன்னால், படத்தை உருவாக்கித் தருகிறது.
இனி அட்டைப்படங்களுக்கு ஓவியர்கள் தேவையில்லை.
எழுத்தாளர்கள் எந்தத் தலைப்பிலும் கட்டுரை எழுத மெனக்கெட வேண்டாம். தலைப்பைச் சொன்னால் கட்டுரை தயார். காபி-பேஸ்ட் செய்து விடலாம்.
மாதிரிக்கு,
சாலை சந்திப்பில் பூக்கள் விற்கும் தெருவோரக் குழந்தைகள் என்று கேட்டதும் கிடைத்த படம் கீழே.
தேசியவாதத்தின் தீமைகள் என்ன என்று கேட்டதும் கிடைத்த விடைகள் இவை:
தேசியவாதம் மேன்மை உணர்வு மற்றும் பிற கலாசாரங்களை ஏற்றுக்கொள்ளவும் மதிக்கவும் விருப்பமின்மைக்கு வழிவகுக்கும். இது பாகுபாடு, இனவாதம் மற்றும் வன்முறைக்கு வழிவகுக்கும்.
2. தேசியவாதம் ஆக்ரோஷமான வெளியுறவுக் கொள்கைகளுக்கு வழிவகுக்கும், இது போருக்கு வழிவகுக்கும் மற்றும் ஒரு பகுதியின் நிலையற்ற தனைக்கு வழிவகுக்கும்.
3. தேசியவாதம் பன்முகத்தன்மை அல்லது பன்முக கலாசாரத்தை மதிக்காத ஒரு பிரத்யேகமான மற்றும் விலக்கப்பட்ட அணுகுமுறைக்கு வழிவகுக்கும்.
4. தேசியவாதம் பல்வேறு நாடுகளுக்கு இடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தும் மற்றும் "நமக்கு எதிராக அவர்களுக்கு" என்ற மனநிலையை உருவாக்கும்.
5. தேசியவாதம் கடந்த காலத்தில் கவனம் செலுத்த வழிவகுக்கும், இது புதுமை அல்லது முன்னேற்றமின்மைக்கு வழிவகுக்கும்
இந்த களத்தை கூகுள் ஆப் மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம். பெயர்
Chatteo: ChatGPT AI (ARTIFICTIAL INTERLGENCE ) என்ற செயற்கை நுண்ணறிவால் இயங்கம் இந்தச் செயலி எந்த அளவுக்கு மலைப்பை ஏற்படுத்துகிறதோ அதே அளவுக்கு அச்சத்தையும் தருகிறது.