கூகுள் நிறுவனம் கடந்த 7 ஆண்டுகளாக ஆண்டு தோறும் இந்தியாவில் “கூகுள் பார் இந்தியா” என்ற கருத்தரங்கத்தை நடத்தி வருகிறது. இந்த வருடம் தங்களது 8வது கருத்தரங்கத்தை அண்மையில் டெல்லியில் நடத்தியது. இந்த கூட்டங்கள் மக்களுக்கு இயற்கையான வழிகளில் தகவல்களைப் பெற உதவுவது, புதிய கண்டுபிடிப்புகள் எப்படி டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க உதவும் என்பதைச்சொல்லி உதவுகிறது.
மேலும் இந்த கருத்தங்களில் ,நாட்டின் தனித்துவமான வாய்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில் AI-செயற்கை நுண்ணறிவில் இயங்கும் மற்றும் இந்தியாவில் முதல் கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர்களை விருந்தினர்களாக அழைத்து தங்கள் கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்த செய்கிறது.
செல்வ முரளி முதல் தமிழ் டேட்டா ஏ.ஐ ' திரள்' என்னும் வெப்சைட் வெளியிட்டு உள்ளார். அக்ரி சக்தி என்ற ஆப் மூலம் பல விவசாயிகளை இணைத்துள்ளார். பல்வேறு அரசு டிஜிட்டல் முன்னெடுப்புகளில் பங்கு எடுத்துள்ளார். மெட்ராஸ் பேப்பர், கிழக்கு இரு டிஜிட்டல் பத்திரிகைக்களுக்காக வேலை செய்கிறார். வெளி மாநில தேர்தல் டேட்டா வேலைகளில் ஈடுப்பட்டு இருக்கிறார்.
இந்தாண்டு இவரது கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்த கூகுளினால் இவர் அழைக்கப்பட்டார்.
அதைவிட மகிழ்ச்சியான ஆச்சரியம், கூகிள் நிறுவனர் சுந்தர் பிச்சை அவரே அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து சந்தித்து அவர் முன்னெடுப்புகளை தமிழில் விவாதித்து இருக்கிறார். ஆம் முழு உரையாடலும் தமிழில் நடைபெற்றது என்கிறார் செல்வ முரளி.
இது மிகப்பெரும் விஷயம். பல நாட்டு முக்கிய பிரமுகர்கள் சுந்தர் பிச்சையிடம் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காமல் வரிசையில் காத்துக்கொண்டிருக் கிறார்கள்.
ஆனால் சுந்தர் பிச்சை 7 நிமிடம் அப்பாயிண்ட்மெண்ட் என சொல்லி 17 நிமிடம் வரை விவாதித்து இருக்கிறார், அதுவும் தமிழில்! “இது என் வாழ்வில் மிக மகிழ்ச்சியான தருணம்” என்கிறார் செல்வ முரளி.
இவரின் “அக்ரி சக்தி ஆப்” கூகுள் மூலம் இந்தியாவின் சிறந்த Android appகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.