கல்கி

விபத்தும் குற்றமும்

ஹர்ஷா

ண்மையில்  ஒரு இளம் கால்பந்தாட்ட வீராங்கனை மரணமடைந்த சமீபத்திய வருந்தத்தக்க நிகழ்வில், தொடர்புடைய மருத்துவக் குழுவினரின் ஒளிப்படங்களைக் காட்சி ஊடகங்களும் சமூக ஊடகங்களும் போட்டிபோட்டுப் பகிர்ந்துகொண்டிருந்தது. மருத்துவர்கள் மீது வழக்குகள்  பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மருத்துவ விபத்துகளின்மீது காவல் துறை தன்னிச்சையாக வழக்குப் பதியக் கூடாது, கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என ‘ஒரு வழக்’கில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவ விபத்துகளைக் கிரிமினல் நடவடிக்கைபோல் கையாளக் கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது.

 நிகழ்ந்ததை ஒரு குற்றமாகவும்  செய்தியாகவும் மட்டுமே பார்த்த அந்த ஊடகங்கள் மருத்தவ பணியாளர்களுக்கு  உரிமையான அடிப்படை நீதிக்கு (Natural Justice) எதிரானாது என்பதை உணரவில்லை. இவ்வாறான குற்றமாக்குதல் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்களிடையே தேவையற்ற கலக்கத்தை உருவாக்கியுள்ளது.

மருத்துவ விபத்துகளைத் தடுப்பதும், அதற்கான வழிமுறைகளை உருவாக்கி அமல்படுத்துவதும்  ஒரு தனி அறிவியல்.  பிரிட்டிஷ் மருத்துவக் கவுன்சில் மதிப்பீட்டின்படி பிரிட்டனில் 2018-19 ஆம்ஆண்டு மட்டும் 240 கோடி பவுண்டுகள் மருத்துவ விபத்துகளுக்காக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் மருத்துவ விபத்துகளுக்காக லட்சக்கணக்கான வழக்குகள் ஆண்டுதோறும் பதிவாகின்றன. ஆனால், எந்தவொரு நாட்டிலும் மருத்துவ விபத்துகள் ஒரு கிரிமினல் குற்றமாகக் கருதப்படவில்லை.

எந்தவொரு மருத்துவர் குழுவும் இளம் கால்பந்தாட்ட வீராங்கனை ஒருவரின் காயம்பட்ட கால்களைச் சரிசெய்து அனுப்புவதையே சாதனையாகக் கருதும், விரும்பவும் செய்யும். ஆனால், எதிர்பாராத ஒரு விபத்து சில தனிநபர்களுக்கு எதிராகப் பெரிதாக்கப்படும்போது, நோயாளிகளுக்கான சிகிச்சைகளைவிடத் தங்களைக் காத்துக்கொள்வதே முக்கியம் என்று கருதும் மனநிலையையே மருத்துவப் பணியாளர்களிடையே உருவாக்கும். 

ஒரு சிகிச்சையில்  மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், மட்டுமில்லாமல் மருந்தாளுநர்கள், மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பர்கள், மருந்து நிறுவனங்கள், மருத்துவக் கருவிகளைத் தயாரிப்போர், அவற்றைப் பராமரிப்போர் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தோர் ஒன்றிணைந்து பங்கேற்கின்றனர்.இவர்களின் செயல்பாடுகளில் ஓரிடத்தில் சிறு தவறு நேர்ந்தால்கூட, அது இறுதியில் நோயாளியைப் பாதிக்கிறது.

உலகம் முழுவதும் மருத்துவதுறையில்  இந்த சிக்கலான தொடர் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது  ஒரு சவாலாக உள்ளது. அமெரிக்காவில் லட்சக்கணக்கான டாலர்களை இதற்காக செலவிடப்படுகிறது.  இந்தியாவில் இது குறித்த தெளிவான தனி சட்டங்கள் இல்லை. இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது.

விபத்து ஒன்றை எவரும் குற்றமாக்க முடியாது; விபத்து என்பது விபத்து மட்டுமே. ஒரு சம்பவத்தைக் குற்றம் என வரையறுக்க, அதற்கு உள்நோக்கம் இருக்க வேண்டும். மருத்துவ விபத்துகளுக்கு உள்நோக்கம் என்கிற ஒன்று இருக்க வாய்ப்பில்லை. எந்தவொரு மருத்துவர் குழுவும் இளம் கால்பந்தாட்ட வீராங்கனை ஒருவரின் காயம்பட்ட கால்களைச் சரிசெய்து அனுப்புவதையே சாதனையாகக் கருதும், விரும்பவும் செய்யும். அவர்கள் மேற்கொண்ட  சிகிச்சை முறைளை நிபுணர்கள் குழு ஆராயாமல் நேரடியாக வழக்குப் போடுவது மாறாக அவர்களின் செயலை குற்றமாகக் கருதுவது நியாமான செயலாகாது.

 குறைந்த கால அளவில் சுகாதாரத் துறையில் தமிழ்நாடு பெரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. தேவைக்குக் குறைவான பணியாளர்களையும் கட்டமைப்பையும் கொண்டு, கடைசி நோயாளிவரை இங்கே சிகிச்சை வழங்கப்படுகிறது. மருத்தவர்களின் மருத்துவ பணியாளர்களின் அர்ப்பணிப்பான சேவைகளை கொரொனா காலகட்டத்தில் நாம் பார்த்தோம்

உலகின் எந்தப் பகுதியிலும் மருத்துவ விபத்துகளை முற்றிலும் தடுப்பது இன்றுவரை சாத்தியப்படவில்லை. அறிவியலின் தொடர் வளர்ச்சியில் ஒருநாள் அது சாத்தியமாகும்.

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

SCROLL FOR NEXT