இருநூறு வார்த்தைகளில் எப்படி அந்த மாமனிதனின் புகழை பாடுவது? இருந்தாலும் அது ஒரு நிபந்தனை என்பதால் ஏற்றுக்கொண்டு இரண்டு விஷயங்களை மட்டும் பகிர்ந்து முடிக்கிறேன்.
என் நண்பனின் பெண் ஒருவள், என்ன மாமா, எப்ப பாத்தாலும் எம்ஜிஆர் எம்ஜிஆர் என்று உயிரை விடுகிறீர்களே, அப்படி என்ன அவர் பெரிசா சாதிச்சிட்டார் என்று கேட்டாள். அதற்கு நான் அவர் படத்தில் இருப்பது போல்தான் நிஜத்திலும் இருப்பார் என்று கூறி, எம்ஜிஆரின் இரண்டு பாடல்களை மட்டும் பாடிக்காட்டினேன்
அந்த பாடல்கள்: தூங்காதே தம்பி தூங்காதே மற்றும் சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா.
நம்ப மாட்டீர்கள். மறுநாள் அந்தப்பெண் பல்லை பிரஷ் பண்ணும்போது தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாட்டை ஹம்மிங் செய்துகொண்டேதான் பிரஷ் செய்தாள்.
அடுத்து மூன்று வருடங்கள் முன்னால் என் மாமா பையன் ஒரு ஈவண்ட் ஷோ செய்வதற்காக, சென்னை வந்து எம்ஜிஆரை பற்றி விசாரிக்க ஆரம்பித்தவன், வாய் பிளந்து நின்றுவிட்டான்.
என்ன மாமா, நீங்கதான் ஏதோ அவரது ரசிகர்ங்கற முறைல அவரை புகழறீங்கன்னு பாத்தா, சென்னைல அவரைப்பத்தி பாக்கறவங்கள்லாம் பக்கம் பக்கமா சொல்றாங்க. நான் அசந்தே போயிட்டேன்னு சொன்னான்.
ஆக இளைய தலமுறையினரையும் கூட இன்றும் அசரவைப்பவர்தான் நமது புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.