சமீபத்தில் தெருக்கடை ஒன்றில் டீசலை ஊற்றி பரோட்டா செய்வதாகக் காண்பிக்கப்பட்ட வீடியோ வைரலானது. அதில் அந்த பரோட்டா செய்பவர் பலரும் இதை விரும்பி சாப்பிடுகிறார்களென பெருமையுடன் சொல்கிறார். பெரும் கண்டனங்களுக்குப் பிறகு ஹோட்டல் உரிமையாளர் “உண்மையில்லை Fun க்காக எடுக்கப்பட்ட வீடியோ” என்கிறார். இந்த வீடியோ எவ்வளவு பெரிய தாக்கத்தை பலரிடம் ஏற்படுத்தியிருக்கும் உயிருடன் விளையாடுவது சிலருக்கு வேடிக்கையாக இருக்கிறது.
அதே போல சமீபத்தில் ஸ்மோக் பிஸ்கட் எனப்படும் திரவ நைட்ரஜன் கலந்த பிஸ்கட்டை சாப்பிட்ட சிறுவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை செய்திகளின் மூலமாக அறிந்தோம். புதுமையாக செய்ய வேண்டுமென வியாபார நோக்கோடு எதை வேண்டுமானாலும் செய்து மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுப்பது கண்டிக்க வேண்டிய ஒன்று. ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்பணர்வு முதலில் நமக்கு இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நாம் கற்றுத் தரும் நல்லவைகள் பசு மரத்தாணி போல் மனதில் பதிந்து விடும்.
ஆரோக்கியமான உணவு குழந்தைகள் சரியாக வளர உதவுகிறது மற்றும் நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. ஆரோக்கியமான உணவை உண்ணும் பெரியவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் மற்றும் உடல் பருமன், இதயநோய், நீரிழிவு நோய் மற்றும் சில புற்றுநோய்களின் ஆபத்து குறைவாக உள்ளது.
முறையற்ற உணவு முறைகள் உடல் ஆரோக்கியத்தை சீர் குலைக்கும். ஸ்மார்ட் உணவுத் தேர்வுகள் நமக்கு ஆற்றலைத் தருகின்றன பலவிதமான வண்ணமயமான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதங்கள் அடங்கிய உணவுகளை தேர்ந்தெடுப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை தரும். இடையில் ஊட்டச்சத்து மிகுந்த தின்பண்டங்களை குழந்தைகளுக்கு தரலாம். சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நன்கு எண்ணெயிடப்பட்ட இயந்திரத்தைப் போலவே நம் உடலை சீராக இயங்க வைக்கிறோம்
புரதங்கள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சீரான காலை உணவுடன் நம் நாளைத் தொடங்குவது, அந்த நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்திருக்கும். துரித உணவுகளை குழந்தைகளுக்கு காலையில் உணவாகக் கொடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
ஊட்டச்சத்து வயதானவர்களுக்கு இதயநோய், நீரிழிவு நோய், பக்கவாதம், சில புற்றுநோய்கள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட சில நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும். உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ராலைத் தடுக்கவும் உதவும். .
ஆரோக்கியம் மற்றும் மேம்பாட்டில் ஊட்டச்சத்து ஒரு முக்கிய பகுதியாகும். சிறந்த ஊட்டச்சத்து என்பது மேம்பட்ட சிசு, குழந்தை மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியம், வலுவான நோயெதிர்ப்பு, பாதுகாப்பான கர்ப்பம் பிரசவம், ஆகியவற்றுடன் தொடர்புடையது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பதிலும், நோய்களைத் தடுப்பதிலும் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலின் சரியான செயல்பாட்டிற்கு அவசியம். அவை வளர்ச்சியை தந்து, திசுக்களை சரிசெய்கின்றன மற்றும் உடல் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துகின்றன.
நல்ல ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை நாமே தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கும் பெரியவர் களுக்கும் அவர்களுக்கு பிடித்த வகையில் செய்து கொடுத்து குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.