Mazhai Pidikatha Manithan Review 
கல்கி

Review - 'மழை பிடிக்காத மனிதன்' நம்மை ஏமாற்றவில்லை!

ஆதிரை வேணுகோபால்

மழை பிடிக்காத மனிதன்... என் பார்வையில்...

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படத்தின் கதையிலிருந்து 'மழைபிடிக்காத மனிதனின்' கதை தொடங்குகிறது.

சலீம் படத்தின் கிளைமாக்ஸ் கட்சியின் சலீம் அமைச்சருடைய மகனை கொலை செய்துவிட்டு தப்பித்து விடுவார். அதிலிருந்து தப்பித்து வருபவர் இராணுவத்தில் ஏஜென்டாக மாறி, மற்றொரு உளவு அதிகாரி சரத்தின் தங்கையை திருமணம் செய்து கொண்டு மகிழ்வாக குடும்பம் நடத்துகிறார். அமைச்சரின் மகனை கொன்றுவிடும் சலீமை அழிக்க அமைச்சர் முயற்சிக்கையில். மழை பெய்யும் நாளில் மனைவியை இழக்கும் விஜய் ஆண்டனி சின்னக் காயங்களுடன் உயிர்த்தப்புகிறார். தனது மனைவி இறந்த நேரத்தில் மழை பெய்த காரணத்தால் மழையை வெறுக்க தொடங்குகிறார் விஜய் ஆண்டனி.

நடந்த தாக்குதலில் மனைவியுடன் சேர்ந்து விஜய் ஆண்டனியும் இறந்துவிட்டார் என்று மற்றவர்களை நம்ப வைத்து, சரத், விஜய் ஆண்டனியை அந்தமானுக்கு அனுப்பி வைக்கிறார்.

தன்  அடையாளத்தை மறைத்து புதிய ஊரில் வாழும் ஹீரோ. அங்கே கிடைக்கும் அழகான புதிய உறவுகள். அவர்களுக்கு வரும் பிரச்சனை. அதற்காக களம் இறங்கும் ஹீரோ. பின்னாலேயே தொடர்ந்து வரும் பழைய பகை. என பழகிய மையக்கதை தான். ஆனால் அதைச் சுவாரசியமாக அந்தமானின் பின்னணியில் புதுமையான ஆக்ஷன் மேக்கிங்குடன் கொடுத்திருக்கிறார் விஜய் மில்டன். தமிழ் சினிமாவில் அதிகம் காட்டப்படாத அந்தமான் தீவுகள் அங்குள்ள வீடுகள், தெருக்கள், ஊரின் கட்டமைப்புகள். கண்ணுக்கு குளிர்ச்சியாக படம் பிடித்திருக்கும் விதம் அருமை.

சலீம் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சிகளில் நிமிர்ந்து உட்கார வைக்கிறார். சுப்ரீம் சிவா, மகேஷ் மாத்யூ, கெவின் குமார் ஆகியோரின் சண்டைக் காட்சிகள் அருமை. விஜய் ஆண்டனி அதகளம் செய்கிறார்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் விஜய் மிலிட்டனின் ஒளிப்பதிவு. குறிப்பாக சண்டை காட்சிகளை அழகாக படம் பிடித்து இருக்கிறார். வாழ்த்துகள் சார். புதுமையான முறையில் முயற்சி செய்யப்பட்ட ஆக்ஷன் காட்சிகளுக்கு விஜய் மில்டனின் ஒளிப்பதிவு இன்னமும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கு. திரைக்கதையை நகர்த்தும் சில இன்டர்கட் தொகுப்புகளும் ரசிக்க வைக்கின்றன.

எப்போதும் ஒரு மென்சோகமும், நீளமான தலைமுடி அதன் மேல் நீளமான தொப்பி.. என, முழுதும் தளர்வான தோற்றத்தில் அசத்தலாக, நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி அமைதியான முகத்துடன் தேவைக்கேற்ப உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நம்மை ஈர்க்கிறார்.

சரண்யா பொன்வண்ணன். வழக்கமான பாசக்கார நடிப்பு மேகா ஆகாஷ். அழகு பிரித்வி அம்பர்... துள்ளல்
முரளி சர்மா. நக்கல் சரத், சத்தியராஜின் அனுபவ நடிப்பு எல்லாமே நேர்த்தி.

'தான்' என்கிற அகம்பாவத்துடன் வாழும் ஒரு கதாபாத்திரத்தை டான்போல் வில்லனாக காட்டி இருப்பது ரசிக்க வைக்கிறது. கன்னட நடிகர் டாலி தனஜெயன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். ஸ்பெஷல் பாராட்டுகள் டாலி.

படத்தின் ஆரம்பத்தில் இருந்து அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பு ஏற்படும் கதைக்களம் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.

"கெட்டவனைஅழிக்க வேண்டாம் கெட்டதை அழிப்போம்" சுவாரஸ்யமான கருத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். கிளைமாக்ஸ் காட்சியில் வந்த கருத்து மனதை தொடுகிறது. "தீமை செய்பவன் அழியணும்னு இல்ல தீமை தான் அழிய வேண்டும்"

பின்னணி இசை படத்திற்கு பக்கபலம். படத்தின் பிளஸ் ... அசத்தலான டைட்டில்! தேங்கியிருக்கும் நீரில் மழையின் துளிகள் விழ, ஆங்காங்கே வரும் குட்டி குட்டி கொட்டேஷன்கள் கவிதை.

மைனஸ்:

கதாநாயகனின் பின்னணி தெளிவாக இல்லாமல் மர்மமான முறையில் இருப்பது.
மொத்தத்தில் திரைக்கதையில் இன்னமும் சுவாரஸ்யம் கூட்டி இருந்தால் மழை பிடிக்காத மனிதன் மனதிற்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பான்.
விஜய் ஆண்டனியை பிடித்த என்னை போன்ற பலருக்கு, இந்த படம் மிகவும் பிடிக்கும்.

மழை பிடிக்காத மனிதன் திரைஅரங்குக்கு வந்தவர்களை ஏமாற்றவில்லை.

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

மழைக்கால சிறுநீர் தொற்று பாதிப்பும் காரணங்களும்!

பணி ஓய்விற்குப் பின் வரும் காலம் பயனற்றதா?

SCROLL FOR NEXT