கல்கி

நாசிக் ‘ஸுலா வினியார்ட்ஸ்!’ (ஸுலா திராட்சைத் தோட்டங்கள்)

பயணம்

மும்பை மீனலதா

‘SULA’ (ஸுலா) இந்தியாவின் மிகப்பெரிய விருது பெற்ற மதுவின் ப்ராண்ட் பெயராகும். திராட்சைப் பழங்களின் வகைகளிலிருந்து தயாரிக்கப்படும் Chenin Blane, Sauvignon Blanc; Riesling; Zinfandel போன்ற மது தயாரிப்புத் தொழிலில் முன்னணியில் இருக்கிறது இந்த ப்ராண்ட்.

SULAவின் ஆரம்பம்

சிலிகான் பள்ளத்தாக்கில் பணிபுரிந்து வந்த மும்பைவாசியான ராஜீவ் சாமந்த், 1993இல் இந்தியா வந்தவர், கலிபோர்னியா நாட்டின் புதுமையை தனது தாய்நாட்டில் அறிமுகப்படுத்த எண்ணினார். செய்துவிட்டார். இவர் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்து Oracle கார்ப்பொரேஷன் கம்பெனியில் பணி புரிந்தவர்.

Sweety Upper Lip Alert என்பது SULAவின் விரிவான பொருள்.

மேலும், ராஜீவ் சாமந்த்தின் தாயார் பெயர் ‘சுலபா’ (Sulabha). இதன் காரணமாக Brandஇன் பெயர் ஸுலா. ஸுலா என்றால் சூரியன் என்கிற அர்த்தமாகும்.

ஸுலாவின் Promoter; MD, மற்றும் CEO ராஜீவ் சாமந்த் ஆவார்.

SULA Vineyards எங்கே உள்ளது?

ராட்டிய மாநிலத்தில் இருக்கும் நாசிக்கில் இந்த ‘ஸுலா’ உள்ளது. நாசிக் ரோடு ரெயில் நிலையத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் ரம்மியமான ஓர் இடத்தில் அமைக்கப் பட்டுள்ளது.

இந்தியா திரும்பிய ராஜீவ், குடும்பத்திற்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் மாம்பழம், ரோஜா மலர்களை வளர்த்து வந்தார். நாசிக்கில் திராட்சைப்  பழங்கள் அதிகமாக உற்பத்தியாவதைக் கண்ட அவர் மனதில் ஒரு ஐடியா தோன்றியது. மீண்டும் கலிபோர்னியா சென்று மது தயாரிப்பில் புகழ் பெற்றவரான Kerry Damskeyஐ சந்தித்து விவரமாகப் பேச, அவர் இவருக்கு ஒயின் ஆலையை நாசிக்கில் ஆரம்பிக்க யோசனைகள் கூறினார்.

அப்புறமென்ன? விதவிதமான திராட்சை செடிகள் பயிராக்கப்பட்டன. 1999இல் நாசிக்கில் முதல் ஒயின் ஆலை ஆரம்பிக்கப்பட்டு, 2000ஆம் ஆண்டு ஒயின் ரிலீஸ் ஆனது.

SULA Vineyards விபரங்கள்:

து தயாரிக்கத் தேவையான திராட்சைப் பழ climbing shrubs வளர்க்கப்பட்டுள்ளன. அதுவும் ஆர்கானிக் முறையில் 3000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்து பராமரிக்கப்படுகின்றன. ஃப்ரெஞ்சு Sauvignon Blane மற்றும் கலிபோர்னியா Chenin Blanc ஆகியவைகளும் இங்கே உள்ளன.

Red, white, Rost, Sparkling, Dessert போன்ற மதுவகைகள் இந்த திராட்சைப் பழங்களிலிந்து தயாரிக்கப்படுகின்றன. பெரிய பெரிய ஸ்டீல் பாத்திரங்களினுள் மற்றும்  Barrels (பீப்பாய்கள்) களிலும் மது வைக்கப்பட்டிருக்கின்றன.

Wine (மது) Tour:

சுமார் 40 நிமிடங்கள் Sula Vineyards-இற்குள் பார்வையார்களுக்கு wine Tour programme நடத்தப்படுகிறது. எவ்வகையான திராட்சைப் பழங்கள், எம்மாதிரியான மது தயாரிக்க உதவுகின்றன? எப்படி அதன் செய்முறை மற்றும் பாதுகாக்கப்படும் விதம் என்றெல்லாம் விளக்கப்படுகிறது.

SULA Zinfandel (Rich wine) :

து ‘அமெரிக்கன் ஓக் பேரல்ஸ்’ (American Oak Barrels)ற்குள் சுமார் – 3-4 மாதங்கள் வைக்கப்பட்டு எடுக்கையில், அதில் இயற்கையாகவே Spice மற்றும் ஒருவித Smoke வாசனையும் வருமென்று விபரமாகச் சொல்லப்படுகிறது.

RASA Cabernet Sauvignon (Red wine) இது ஃப்ரெஞ்ச் ஓக் பேரல்ஸ்’ (Frence Oak Barrels)ற்குள் ஒரு வருட காலம் வைக்கப்படுகிறது.

Dia Red Wine Spartler, Lambrusco என்கிற திராட்சை வகையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும். திராட்சைப் பழங்களிலிருந்து செய்யப்படும் ஸுலாமது, விதவிதமான ருசிகளைக் கொண்டதோடு மற்ற மதுக்களிலிருந்து கொஞ்சம் விலையும் குறைவுதான். சுமார் 14% ஆல்கஹால் கொண்டது.

ராஜீவ் சாமந்த் இன் பெயரில் உள்ள இரு எழுத்துகளைக் கொண்டு ‘RASA’ (Rajeev Samant) என சில மதுக்களுக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

டேஸ்டிங் ரூம்

இந்த சின்ன டூரில் டேஸ்டிங் ரூமிற்குள் பார்வை யாளர்களை அழைத்துச் சென்று, 5 – 6 விதமான Sula மதுவை டேஸ்ட் செய்ய, இலவசமாக கொடுக்கிறார்கள். இங்கே 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி. ஒவ்வொருவிதமான மதுவின் விவரம் கூறியபின் அழகான கண்ணாடி கோப்பையில் கொஞ்சமாக ஊற்றி அருந்தச் சொல்கிறார்கள். சில மது வகைகள் இருதய நோயை மட்டுப்படுத்தவும்,  கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் உதவுமென கூறப்படுகிறது.

தங்கும் அறைகள்

7 ஸ்டார் ஹோட்டல் மாதிரியும், பட்ஜெட்டிற்கு ஏற்ற மாதிரியும் அறைகள் உள்ளன. ஸ்விம்மிங் பூல்; ரெஸ்ட்டாரெண்ட் போன்றவைகளும் இருக்கின்றன. வார இறுதியில் அல்லது விடுமுறை நாட்களில் இங்கே  2 நாட்கள் தங்க இயலும். காலாற நடக்கலாம்; சைகிளிங் செய்யலாம். இயற்கையழகை ரசிக்கலாம். சூரியத் தகடுகள் (Solar Panels) 100க்கும் மேல் பொருத்தப் பட்டுள்ளன.

இந்த அறைகளில் தங்குபவர்களுக்கு Sula wine Tour மற்றும் காலை உணவு இலவசம். பிற பார்வைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சிறுகதை: 'லக்கி லதா'!

ருசியான கப்பக்கிழங்கு புழுக்கும் சின்ன வெங்காய தொக்கும்!

சமூக வலைதளங்களில் யாரையெல்லாம் அன்ஃப்ரெண்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

உலகெங்கிலும் பெண் மருத்துவர்கள் உருவாக காரணமான, முதல் மருத்துவப் பட்டம் பெற்ற, பெண்மணி யார்?

குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT