Online Employment Sites  
கல்கி

வேலைவாய்ப்பைக் கொடுக்கும் ஆன்லைன் தளங்கள் - ஒரு பார்வை!

ரா.வ.பாலகிருஷ்ணன்

வேலைவாய்ப்புத் தகவல்களை விரல் நுனியில் அளிக்கும் இணையதளங்கள் இன்று அதிகரித்துள்ளன. இதனால் வேலை தேடுவது என்பது எளிதாகி விட்டது. இது குறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

உலகம் வளர்ச்சியின் பாதையில் சென்று கொண்டிருப்பதால் இன்று தொழில் வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மேலும் இதன் கூடவே ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், வேலை தேடுவது கூட உள்ளங்கையில் வந்து விட்டது.

பட்டப்படிப்பு முடித்த பிறகு ஒவ்வொரு நிறுவனத்திற்கும் நேரில் சென்று வேலை இருக்கிறதா என்று கேட்கும் நிலைமை இப்போது இல்லை. எந்தெந்த நிறுவனங்களில் மொத்தம் எத்தனை வேலைவாய்ப்புகள் உள்ளன, அதற்கான தகுதிகள் என்னென்ன, சம்பள வரம்பு எவ்வளவு மற்றும் இதர தகவல்கள் அனைத்தும் இப்போது ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்புகளை உடனே தெரிந்து கொள்ளும் வகையில் பல தனியார் நிறுவனங்கள் இணையதளம் மற்றும் மொபைல் செயலியை உருவாக்கி உள்ளது. அதில் மிகவும் பிரபலமான இணையதளங்களாக இருப்பவை Naukri, Indeed மற்றும் LinkedIn தான். இதனைத் தவிர்த்து TimesJobs, Shine, Google Jobs, Monster, நித்யா ஜாப்ஸ் மற்றும் பல வேலைவாய்ப்பு தகவல்களை அளிக்கும் இணையதளங்கள் வேலை தேடுபவர்களுக்கு உதவி வருகின்றன.

வேலை தேடும் நபர்கள் இந்த இணையதளங்களில் தங்களது பெயர், இமெயில் முகவரி மற்றும் மொபைல் எண்ணைக் கொடுத்து உள்நுழைய வேண்டும். பிறகு சுயவிவரக் குறிப்பை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த தளத்தில் வேலைவாய்ப்பை அறிவிக்கும் தனியார் நிறுவனங்கள் உங்கள் சுயவிவரப் குறிப்பைப் பார்த்து, அனைத்து தகுதிகளும் பொருந்தினால் இமெயில் அல்லது ஃபோன் கால் மூலம் நேர்காணலுக்கு அழைப்பார்கள். நேர்காணலுக்கு கால தாமதமின்றி குறித்த நேரத்திற்குச் செல்வது மிகவும் முக்கியமானது.

அவ்வப்போது நாமும் வேலைவாய்ப்பு இணையதளங்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். சில நிறுவனங்கள் வாக் இன் (Walk-In) முறையில் நேர்காணல்களை நடத்தும். இதனைக் கண்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்குச் சென்று நேர்காணலை எதிர்கொள்ளலாம். வேலைவாய்ப்பைத் தேடி அலையும் காலம் போய், வேலைவாய்ப்புகளை வீட்டில் இருந்தே அறிந்து கொள்ள உதவும் இந்த வசதி பல இளைஞர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.

இந்த இணையதளங்களில் இளைஞர்கள் பலரும் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆகையால் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அதாவது சில போலி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிப்பதாக இணையத்தில் அறிவிப்புகளை வெளியிட்டு, பணம் பறிக்க வாய்ப்புள்ளது. ஆகவே வேலை தேடுபவர்கள், வேலைவாய்ப்புத் தகவல்களை மட்டுமின்றி அந்த நிறுவனங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வது முக்கியமாகும். இந்தியாவில் பல இளைஞர்கள் வேலைவாய்ப்புத் தகவல்களை அளிக்கும் இணையதளங்களின் மூலம் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT