தங்கத்தால் செய்ப்பட்ட அணிகலன்கள் என்றால் ஆண், பெண் இருவரும் விரும்பி அணிந்துக் கொள்வார்கள். தங்களை அலங்கரித்துக் கொள்ள, விதவிதமான அணிகலன்களை அணிந்து கொள்வது பெண்களுக்கு பிடிக்கும். அந்தவகையில் கொலுசு, மெட்டி இரண்டும் பெண்கள் அணிந்துக்கொள்ளும் முக்கியமான ஆபரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
காலங்காலமாக தங்கத்தால் ஆன கொலுசு மற்றும் மெட்டியை காலில் போடக் கூடாது என நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள். நாம் அணிந்துக்கொள்ளும் அணிகலன்கள் நம் உடலுக்கு பல விதமான நன்மைகளை கொடுக்கின்றன. அந்த வகையில் நம் முன்னோர்கள் அணிகலன்கள் பற்றிய பல விடயங்களை அறிவியல் மற்றும் ஆன்மீக ரீதியாக வகுத்து வைத்துள்ளனர். நாம் இந்த பதிவில் தங்கத்தால் செய்யபட்ட கொலுசு, மெட்டி அணியலாமா என காண்போம்.
தங்கத்தால் ஆன கொலுசு மற்றும் மெட்டி அணியலாமா?
தங்கம் மகாலெட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். அதுபோல நவகிரகங்களில் நன்மைகளை கொடுக்கும் குரு பகவானின் அம்சமாகவும் தங்கம் பார்க்கப்படுகிறது. அதனால் தான் ஒரு சிலர் ஒரு கிராம் தங்கம் வாங்கினாலும் குரு ஓரையில் பார்த்து வாங்க வேண்டும் என கூறுவார்கள்.
மகாலெட்சுமி மற்றும் குருவின் அம்சமாக தங்கம் பார்க்கப்படுவதால், அதை காலில் அணிவது கடவுளை அவமதிப்பதாக கருதப்படுகிறது. எனவே காலில் தங்கத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் அணிய கூடாது என கூறுவார்கள்.
நம் உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு நவகிரகத்தால் ஆளப்படுவதாக நம்பப்படுகிறது. இதில் நம்முடைய கால்பகுதி சனி கிரகத்துடன் தொடர்புடையது. நன்மைகளை கொடுக்கும் குரு பகவான் தங்கத்தின் அம்சமாக கருதப்படுகிறார். குரு பகவானும், சனி பகவானும் பகை கிரகங்கள் என்பதால், தங்கத்தால் செய்யப்பட்ட கொலுசு, மெட்டி காலில் அணிந்து கொள்வதால் அது ஒருவருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
மேலும் ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல், மருத்துவ ரீதியாக தங்கம் ஒருவருக்கு நேர்மறையான ஆற்றலை கொடுக்கக் கூடியது. அதனால் தான் தங்கத்தை இடுப்புக்கு மேலும், வெள்ளியை இடுப்புக்கு கீழும் அணிந்து கொள்ள நம் முன்னோர்கள் பரிந்துரைத்தார்கள். தங்கத்தை காலில் அணிந்து கொள்வதன் மூலம் எதிர்மறையான ஆற்றல் கிடைக்கிறது.
வெள்ளி குளிர்ச்சியான பொருள் என்பதால் அதை காலில் அணிந்து கொள்ளலாம். இதனால் உடல் சூடு குறைக்கும்.
மேலும் உடலில் எல்லா இடங்களிலும் நாம் தங்கத்தை அணிந்து கொண்டால் உடல் உஷ்ணமாகும். இதனால் பல நோய்கள் ஏற்படும் என்பதால் கால்களில் தங்கத்தை அணிந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது.
இப்போது புரிந்ததா பெண்களே?