வளரிளம் பெண் குழந்தைகளின் ஆரோக்யம் பாதுகாக்க அக்காலத்தில் இயற்கையான உணவு முறைகளையே பின்பற்றி வந்தார்கள். பூப்பெய்துவதும், மாதவிலக்கும் ஒரு இயற்கை சுழற்சியே என்ற அளவில் அவர்கள் அதை திடமாக எதிர் கொள்ளவும் வலியின்றி கடந்து போகவும் பல்வேறு இயற்கை உணவினை செய்து சாப்பிட கொடுத்து வந்தார்கள்.
பூப்பெய்திய பெண் குழந்தைகளுக்கு அதிகாலை வேளையில் நிறைய கருப்பட்டி சேர்த்து செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணெய் தருவார்கள்.
கைநிறைய வெல்லம் மற்றும் முழு பொட்டு கடலை கொடுத்து சாப்பிட சொல்வார்கள். ஒரு மணி நேரம் நேரம் கழித்து சிவப்பு அரிசி மாவு மற்றும் வெல்லம் சேர்த்து செய்த இனிப்பு புட்டு உளுத்தம் பருப்பு வெல்லம் சேர்த்து நல்லெண்ணெய் சுட்ட இனிப்பு வடை வைத்து மிச்சம் வைக்காமல் சாப்பிட சொல்வார்கள்.
அரு நெல்லி ஊட்டும் சோறு அம்மா கூட ஊட்ட முடியாது என்ற சொல் வழக்கு உண்டு. இந்த நெல்லிக்காய் பெண்களின் கருப்பை வளர்ச்சி மற்றும் ஆரோக்யம் பாதுகாக்கும் கேடயம் என்று நம்மில் பலருக்கு தெரியாது.
நல்லெண்ணெயில் சுட்ட ராகி ரொட்டி வறுத்த எள் , வேர்க்கடலை, பொட்டுக்கடலை , வெல்லம் சேர்த்து செய்யும் எள் உருண்டை சாப்பிட சொல்வார்கள். குழந்தைகளின் உள் உறுப்புகள் மற்றும் பெண்பால் உறுப்புகள் யாவையும் பலமாக வளர்த்து சீரான ஆரோக்கியம் காக்கும் .
பூப்பெய்திய பெண் குழந்தைகளுக்கு வாழைப்பூ குருத்து எடுத்து இரும்பு கடாயில் நெய் சேர்த்து வதக்கி வெல்லம் சேர்த்து சாப்பிட் தரும் வழக்கம் உண்டு .
உளுந்து வெல்லம் நல்லெண்ணெய் சேர்த்து இரும்பு கடாயில் செய்த. உளுத்தங்களி. மற்றும் வெந்தயக்களி பாசிப்பருப்பு நெய் உருண்டை. வெல்லப்பாகில் செய்த. கடலை மிட்டாய் சாப்பிட தருவாங்க .
அதிக உதிரப்போக்கு இருந்தால் அந்த பெண் குழந்தைக்கு. தொடர்ந்து ராகி புட்டு கம்பு அடை என்று வெல்லம் சேர்த்து செய்து தருவதும். இட்லி தோசை இடியாப்பம் தொட்டு கொள்ள தினமும் சுத்தமான கற்கண்டு பாகு ஊற்றி தருவார்கள். கற்கண்டு பாகை வாரம் இருமுறை தொடர்ந்து சாப்பிட்டு வர கால்சியம் சத்து குறைபாடு வராமல் பார்த்துக் கொள்ளும்.