மங்கையர் மலர்

கவலையைத் தீர்ப்பது உடற்பயிற்சி!

மங்கையர் மலர்

ம் முன்னோர்கள் என்றுமே உடலையும், உள்ளத்தையும் வேறுபடுத்திப்  பார்த்ததே இல்லை. உடலின் கேடு மனத்தையும், மனத்தின் கேடு உடலையும் நிச்சயம் பாதிக்கும் என்பதுதான் காரணம். உடலுக்கும் மனத்திற்கும் மிதமான பயிற்சி அவசியம் என்றார்கள். ஆனால் மிதமிஞ்சின பயிற்சி எதற்குக் கொடுத்தாலும் ஆபத்துதான். அதனால் மிதமான பயிற்சியில் உள்ளமும், உடலும் வலுப்பெற்று  ஓட்டுமொத்தமான, ஆரோக்கியமும், ஆக்க சக்தியும் பெறலாம் என்பதே இந்தியக் கண்ணோட்டம்.

உடலால் செய்யும் உடற்பயிற்சி உடலுக்கு மட்டும்தான் என்று நாம் வரையறுப்பதில்லை. உதாரணமாக ஒருவருக்குத் தொப்பை விழுந்து விட்டாலோ, உடல் பருத்தாலோ, நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்வதால் பிட்டம், இடுப்பு, தொடை என்று எது பருத்து உடம்பில் இப்படி பல பாகங்களை  சரிபடுத்த தியானத்தை விட உடற்பயிற்சி அவசியமாகிறது. யோகாசனமும் ஒருவரை உடற்பயிற்சி என்று எடுத்துக்கொண்டாலும் சரி அல்லது எக்சர்ஸைஸ் / விளையாட்டு என எடுத்துக்கொண்டாலும் சரி.

உடம்பில் வரும் இந்த மாதிரி அவஸ்தைகள் நம் மனத்தையும் பாதித்து இன்னும் முகத்தில் சுருக்கங்களும், மனக் கவலையும் அதிகரிக்கும். உடம்பு மெலிந்து நாம் நினைப்பது போல் அழகாகிவிட்டால் மனதில் புது தெம்பும் உற்சாகமும் பிறந்துவிடும். இதைத்தான் மனத்தால் உடம்பும், உடம்பால் மனத்தின் கவலையும்  தீரும் என்கிறார்கள்.

உடற்பயிற்சி மனத்துக்கு எப்படி உதவுகிறது. நாம் பல மணி நேரம் மூளையைக் கசக்கிப் பிழிந்து செய்யும் பல வேலையில் ஈடுபடும்போது மனம் ரிலாக்ஸ்டாக வேண்டுமா? உடம்புக்கு சிறு உடற்பயிற்சி செய்தால் மனதும் லேசாகி விடும். இதனால்தான் பள்ளியில் ஏழு வகுப்புகள் கருத்தூன்றி கவனிக்கச் செய்து ஒரு பீரியட் விளையாட்டு வகுப்பு என்று வைக்கிறார்கள்.

ஓடி, ஆடி விளையாடிய பின்பு மூளை சுறுசுறுப்பாகி ‘கான்ஸன்ட்ரேஷன்’ அதிகரிக்கிறது. இதை நீங்களே அனுபவித்தால்தான் புரியும். இல்லாவிட்டால், “நல்லா கோயில் மாடு மாதிரி திரி பாடம் எப்படி ஏறும்” என்றுதான் கேட்பீர்கள். ஆங்கிலத்தில்  “All work and no play makes Jack a dull boy” என்கிறோம்.

குழந்தைகள் வீட்டு வேலை செய்துவிட்டு உட்கார்ந்து படிக்கும்போது இன்னும் நன்றாக படிக்க முடியும். படிப்பது வேகமாக தலையில் ஏறும் என்று கூறுகிறார்கள். ஆமாம், அது விளையாட்டு/உடற்பயிற்சி என்றில்லாமல் வீட்டு வேலை (உடலுழைப்பு) ஆனாலும் சரி மிதமாக செய்யும்போது மூளைக்கும் பலனளிக்கிறது.

குழந்தைகளுக்கு சங்கீதம் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுக்கும்போது ஞாபகசக்தி அதிகரித்து அதனால் படிப்பில் பலன் தெரிகிறது. இதிலுள்ள விஷயம் இதுதான். பாடும்போது அதுவும் முக்கியமாக ஆலாபனைகள் செய்யும்போது மூச்சை அடக்குகிறோம். மூச்சை அடக்கிப் பாட்டுப் பாடுவது ஒரு மணி நேரம் வாக் சென்று வரும் அதே பலனை அளிக்கிறது.  ஏனென்றால் Brisk walking செய்யும்போது அதே ‘எனர்ஜி’ உடம்பில் வருகிறது என்பதால் இப்போது வயதான இருதய நோயாளிகளுக்கு நடக்க முடியாவிட்டால் பாடத் தெரிந்தால் பாடலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.  பாடும் பாகவதர் மட்டுமல்ல, அந்தப் பாட்டில் ‘மெய் மறந்து’ மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் அதே பலன்தான் என்பேன்.

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

SCROLL FOR NEXT