IVF என்னும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை வேண்டாம் அல்லது இவை செலவு அதிகம் என்பவர்களுக்கு இந்த ஃபலோபியன் குழாய் மறுசீரமைப்பு Fallopian Tube Recanalization என்னும் கருவுறுதல் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இந்த கருவுறுதல் அறுவை சிகிச்சை , கருத்தரித்தலில் இவற்றின் முக்கிய பங்கு என்ன என்பதை விளக்குகிறார் Dr. Mala Raj, FIRM Hospitals, Chennai.
ஃபலோபியன் குழாய்கள் என்றால் என்ன?
பெண்களின் கருவுறுதலுக்கு கருமுட்டையும் விந்தணுக்களும் இணைந்து கருவாக உருவாவதில் ஃபலோபியன் குழாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில் கருவுறுதலுக்கு கருப்பையில் இருந்து கருமுட்டைகள் ஃபலோபியன் குழாய் வழியாகதான் செல்கிறது. கருத்தரிக்க கருமுட்டையுடன் இணைவதற்கு ஃபலோபியன் குழாய் வழியாக விந்தணுக்களும் வருகின்றன. இவை இரண்டும் இணைந்து கருவாக உருவாகி கர்ப்பம் தொடரும் போது அது மீண்டும் கருப்பைக்கு சென்று பதிகிறது. இந்த செயல்முறை சீராக இருக்க வேண்டுமெனில் இந்த ஃபலோபியன் குழாய் அடைப்பு இல்லாமல் இருக்க வேண்டும். இந்த அடைப்பு நீக்கும் சிகிச்சையே ஃபலோபியன் குழாய் மறுசீரமைப்பு ஆகும்.
ஃபலோபியன் குழாய் மறுசீரமைப்பு என்றால் என்ன?
ஃபலோபியன் குழாய் மறுசீரமைப்பு அல்லது Fallopian Tube Recanalization என்பது பெண்ணின் இனப்பெருக்க அமைப்பின் பகுதியான ஃபலோபியன் குழாய்களில் அடைப்புகளை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை அல்லாத செயல்முறை. இந்த சிகிச்சையில் அடைப்பு நீக்க அனுபவமிக்க நிபுணரது தலையீடு தேவை. ( FIRM மருத்துவமனையில் எண்ணற்ற பெண்களுக்கு வெற்றிகரமாக இந்த சிகிச்சை அளித்திருக்கிறார் Dr. Mala Raj. இந்த நுணுக்கமான சிகிச்சை குறித்து அவர் கூறுவதை தொடர்ந்து கேட்கலாம்.)
ஃபலோபியன் குழாய் மறுசீரமைப்பு சிகிச்சை பற்றி...
தம்பதியர் கருவுறாமைக்கு வரும் போது செயற்கை முறை கருத்தரிப்பு பாரம்பரியமாக குடும்பத்தில் வேண்டாம் என்றோ அல்லது அதிக செலவு என்றோ நினைப்பது உண்டு. அவர்களுக்கு அடிப்படை பரிசோதனையில் ஃபலோபியன் குழாய் அடைப்பு இருந்தால் அவர்களுக்கு இந்த ஃபலோபியன் குழாய் மறுசீரமைப்பு முறையில் அடைப்பை அகற்ற வேண்டும்.
அதற்கு லேப்ராஸ்கோபி Laparoscopic அல்லது Hysteroscopic ஹிஸ்டராஸ்கோபி மூலம் அடைப்பை நகர்த்த மிகச்சிறிய கேனல் போட்டு நகர்த்தப்படும். தொப்புள் அருகே கீஹோல் போட்டு சிறிய வெட்டு மூலம் கேமரா அடிவயிற்றில் செருகப்படும். மற்றொரு கேமரா யோனி வழியாக செருகப்படும். இது கருப்பை மற்றும் ஃபலோபியன் குழாயை உள்ளேயும் வெளியேயும் கவனிக்க அனுமதிக்கிறது.
முதலில் லேப்ராஸ்கோபி மூலம் கருப்பை எப்படி உள்ளது, சினைப்பை எப்படி உள்ளது, குழாய் எப்படி உள்ளது என்பதை எல்லாம் ஆராய வேண்டும். பிறகு யோனி வழியாக ஸ்பெகுலம் ஒன்றை வைத்து, கருப்பை வாய் வழியாக சிறிய பிளாஸ்டிக் குழாய் கருப்பைக்குள் நுழைத்து திரவம் அனுப்பப்படும். அடைப்பு இருந்தால் அந்த திரவம் வெளிவராது. அந்த குறிப்பிட்ட இடத்தை மட்டும் கவனித்து அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்யப்படும். பிறகு மீண்டும் திரவம் செலுத்தும் போது அது ஃப்லோபியன் குழாயில் எளிதாக வெளிவரும். இப்போது அடைப்பு நீங்கி விட்டதை உணரலாம். இவர்கள் சிகிச்சைக்கு பிறகு இயல்பாகவே கருத்தரிக்கலாம்.
ஃபலோபியன் குழாய் மறுசீரமைப்பு சிகிச்சை எல்லோருக்கும் வெற்றி தருமா?
சில பெண்களுக்கு ஃபலோபியன் குழாயில் அடைப்பு அதிகமாக இருக்கும். இவர்களுக்கு அடைப்பை நீக்க சிகிச்சை செய்யும் போது அடைப்பு நீங்காமல் இருந்தால் மீண்டும் செய்யகூடாது. ஏனெனில் அது ஃபலோபியன் குழாயை சேதப்படுத்தலாம். இவர்களுக்கு எக்டோபிக் கர்ப்பம் ஏற்படலாம். அல்லது ஃபலோபியன் குழாயில் தொற்று ஏற்படலாம். ஏற்கனவே தொற்று காரணமாகத்தான் குழாயில் அடைப்பு இருக்கும் நிலையில் மீண்டும் தொற்று அதிகரிக்கலாம். இவர்களுக்கு கருத்தரித்தலுக்கு சிறந்த சிகிச்சை ஐவிஎஃப் என்றே சொல்லலாம்.
ஃபலோபியன் குழாய் மறுசீரமைப்பு சிகிச்சைக்கு பிறகு கருவுறுதல் என்பது...?
அடைப்பு நீங்கிய பிறகு இயல்பாக கருத்தரிக்க நேரம் அளிப்பது மற்றும் அடைப்பு நீக்கமுடியாமல் இருப்பவர்களுக்கு ஐவிஎஃப் சிகிச்சை பரிந்துரைப்பது உண்டு. அதே நேரம் அடைப்பு நீங்கினாலும் ஐவிஎஃப் செய்து கொள்ள விரும்பினால் அவர்கள் காத்திருக்காமல் ஐவிஎஃப் செய்து கொள்ளலாம்.
ஃபலோபியன் குழாய் மறுசீரமைப்பு சிகிச்சை வேறு யாருக்கு உதவும்?
குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை (ஃபலோபியன் குழாயில் அடைப்பு ஏற்படுத்தப்படும் சிகிச்சை) செய்த பிறகு குழந்தை இழப்பு அல்லது மீண்டும் குழந்தை வேண்டும் என்று விரும்பும் தம்பதியருக்கு இந்த ஃபலோபியன் குழாய் மறுசீரமைப்பு சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். இவர்களுக்கு லேப்ராஸ்கோபி சிகிச்சை மூலம் அடைப்பு இருக்கும் இடத்தை (கட்டியிருப்பார்கள்) ட்ரிம் செய்து மீண்டும் இரண்டு குழாயையும் இணைக்க வேண்டும். இது மிக மிக நுணுக்கமான சிகிச்சை. ஏனெனில் குழாயின் அளவு மைக்ரோஸ்கோபி அளவு மிக மிக சிறியதாக இருக்கும். இதை கவனித்து மிக நுணுக்கமாக செய்ய வேண்டும். (டாக்டர் மாலாராஜ் இதற்கான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்வதில் அனுபவமிக்கவர். அதற்கேற்ப FIRM மருத்துவமனையில் 3 டி லேப்ராஸ்கோபி என்னும் நவீன தொழில்நுட்பமும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.)
சிகிச்சைக்கு பிறகும் ஃபலோபியன் குழாயில் அடைப்பு இல்லை என்பதை உறுதிபடுத்த திரவம் செலுத்தி பரிசோதிக்கப்படும். இவர்கள் அடுத்த மாதத்தில் கருத்தரிக்க முயற்சிக்கலாம்.
ஃபலோபியன் குழாய் மறுசீரமைப்பு சிகிச்சைக்கு பிறகு கருவுறுதல் எப்போது?
மிக நுணுக்கமான சிகிச்சை என்றாலும் காலையில் மருத்துவமனை வந்து மாலையில் அல்லது மறுநாள் வீடு திரும்பலாம். கீ ஹோல் சர்ஜரி முறையில் செய்யப்படும் இது அதிக தாக்கத்தை உண்டு செய்யாது.
இந்த ஃபலோபியன் குழாய் மறுசீரமைப்பு சிகிச்சையில் அரிதாக மிக குறைந்த வாய்ப்பாக எக்டோபிக் கர்ப்பம் உருவாகலாம் என்றாலும் இது மிக மிக அரிதானது. ஆனால் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருந்தால் வெற்றிகரமான கருத்தரிப்பு சாத்தியமே!