பட்டு புடவைகள்... யாருக்குத்தான் பிடிக்காது?! பூப்புனித நீராட்டு முதல் திருமணம் வரை அனைத்து சுபநிகழ்ச்சிகளுக்கும் பட்டுப்புடவையை தேர்ந்தெடுப்பதில் நம் பெண்களுக்கு கொள்ளை பிரியம். காலம் மாறினாலும் கலாச்சார பழக்கவழக்கங்கள் அப்படியேதானே இருக்கின்றன! காலத்துக்கு ஏற்றவாறு, அதே சமயம் பாரம்பரியம் மாறாமல், 100 ஆண்டுகளாக தனித்துவமிக்க பட்டுப்புடவைகளை ஆர்எம்கேவி நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.
1924 ஆம் ஆண்டுதொடங்கப்பட்ட ஆர்.எம்.கே.வி, 100 ஆண்டுகளை கடந்து 101 வது ஆண்டில், காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த பெருமிதமிகுத் தருணத்தில், 2024 வருடத்திற்கான பண்டிகை கால பட்டுப் பாரம்பரிய அணிவகுபினை அறிமுகபடுத்த, சென்னை அடையார் Fika Restaurant- ல் பத்திரிகையாளர்கள் சந்திப்பினை ஏற்பாடு செயதிருந்தது RMKV. இந்த சந்திப்பில் 11 புத்தம் புதிய தனித்துவமான புடவைகளை அறிமுகப்படுத்தியது.
கல்கி குழுமத்திலிருந்து நாமும் சென்றோம். வியந்தோம். அசந்தோம். புத்தம் புதிய புடவைகள் பற்றி முழு விபரங்களையும் தெரிந்துக் கொண்டோம். ஒவ்வொரு புடவையையும் கணகச்சிதமாக நெய்து, காண்போரை பிரமிக்கவைத்த நெசவாளர்களை எத்தனை பாராட்டினாலும் போதாது. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அவர்களை ஊக்குவித்து உதவும் RMKV நிறுவனத்தாரை வாழ்தாமல் இருக்க முடியாது .
விக்னேஷ் விளங்கினார்: "1924 ஆம் ஆண்டு, முதல் கடையை திருநெல்வேலியில் துவங்கியதில் இருந்து, இன்று வரை நூறாண்டு காலமாக வாடிக்கையாளர்களின் அன்பாலும், வியாபாரிகளின் நம்பிக்கையாலும், எங்களது நெசவாளர்கள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்புள்ள அயராத உழைப்பாலும் எட்ட முடியாத சிகரத்தை ஆர்எம்கேவி எட்டி இருக்கிறது.
கடந்த நூறாண்டுகளாக தனித்துவமிக்க 100 புடவைகளுக்கு மேல் அறிமுகம் செய்து வைத்திருக்கும் ஆரெம்கேவி, இந்த வருடம் மேலும் 11 புத்தம் புதிய தனித்துவமான புடவைகளை அறிமுகப்படுத்துகிறது..." என தெரிவித்தார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புடவைகளை பார்வையிட்டோம். அந்த புடவைகளை உங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறோம்.
4000 வண்ணங்களில் இயற்கை வண்ண பட்டுபுடவை:
இயற்கை வண்ண புடவைகள் தொகுப்பில், உலகில் முதன்முறையாக 4000 விதவிதமான இயற்கை வண்ணங்களை கொண்ட பட்டுபுடவையை தனது சாதனை படைப்பாக அறிமுகப்படுத்தியிருகிறது ஆரெம்கேவி. கடுக்காய், நெல்லிக்காய், மாதுளை, மல்பரி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தாவரங்கள், தாதுக்களை பயன்படுத்தி இந்த வண்ணங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
சங்க இலக்கியத்தின் 99 பூக்கள் பட்டு புடவை:
சங்க இலக்கியத்தில், குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழ் நிலத்தின் 99 பூக்களை பட்டு புடவையில் ஜரிகையால் நெய்து, சாதனை படைத்திருக்கிறார்கள்.
கற்பகவிருட்சம் பட்டுபுடவை:
கற்பகவிருட்சம் பட்டுபுடவை, கடுக்காய், மல்பரி, மரப்பிசின் போன்ற பொருள்களின் இயற்கை வண்ணத்தில் பாரம்பரிய முறையில் வண்ணம் ஏற்றப்பட்டு முந்தானையில் ஜரிகையால் கற்பகவிருட்சம் நெய்யபட்ட அழகிய புடவை.
பீச் ஃபஸ் (Peach Fuzz):
2024, உலகின் நிறம் என அறிவிக்கப்பட்ட பீச் ஃபஸ் எனப்படும் செஞ்சந்தன நிறத்தை ஞானத்திற்கும் அமைதிக்கும் அடையாளப்படுத்தி அறிவித்திருக்கிறார்கள். அதே வண்ணத்தை மாதுளை ஓடு, மரப்பிசின் போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டு உருவாக்கி முந்தானையிலும் பார்டரிலும் பைத்தனி கலையை இணைத்து அற்புதமான சித்திரங்களோடு படைத்திருக்கிறார்கள்.
மெட்டாலிக் ட்வில் பட்டுபுடவை:
இரு வண்ண மெட்டாலிக் ட்வில் பட்டுபுடவை - மயிலின் நீல வண்ணமும் கிரிம்சன் எனும் கருஞ்சிவப்பு வண்ணமும் இணைந்த கலவையில் செவ்ரான் கோடுகளும், பாரம்பரியமிக்க கலம்காரி குதிரை வடிவங்களை பார்டர் மற்றும் முந்தானையில் நெய்தும் பட்டோவியமாக மிளிரும் புடவை.
மண்டலா கலை வடிவ பட்டு புடவை:
மனதிற்கு இதமளிக்கும் பிங்க் வண்ணத்தில் முகலாயர் காலத்து பூக்களையும் கலை வடிவங்களையும் முந்தானை மற்றும் பார்டரில் நெய்து மொஹல் மண்டலா குறியீடுகளும் இணைத்து நெய்யப்பட்ட, பண்டிகை காலத்திற்கேற்ற அழகிய பட்டு புடவை.
புஜோடி பட்டு புடவை:
புஜோடி முறையில் நெய்யப்பட்ட பட்டு புடவை. தனித்துவமான வெளிர்மஞ்சள் நிறத்தில் புஜோடி பார்டரும் முந்தானையும் கோர்வை முறையை பயன்படுத்தி, மஸ்டர்ட், ஆரஞ்ச், மெரூன், ட்டீல் மற்றும் பிங்க் நிறங்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட அற்புத பட்டுபுடவை.
விரிடியன் வண்ண பட்டு புடவை:
விரிடியன் எனும் அரிய வண்ணமான நீலமும் பச்சையும் கலந்த வண்ணத்தில் 11 இன்ச் பார்டரோடு பாரம்பரிய கமலம் மற்றும் பன்னீர் செம்பு புட்டாக்கள் நெய்யப்பட்டு உருவாக்கப்பட்ட கண்கவர் அதிசயம்.
காப்புரிமை பெற்ற லினோ நுட்பத்தை பயன்படுத்தி, லினோ கட் ஒர்க் பட்டு புடவை, பாயடி டிஸ்யூ லினோலைட் மற்றும் லினோ வர்ண பட்டுப் புடவைககளை வழக்கமான பட்டுப் புடவைகளில் இருந்து 40% எடை குறைவாகவும் அணிவதற்கு இலகுவாகவும் காற்றோட்டம் கொண்டதாகவும் உருவாக்கி இருப்பது தனிச்சிறப்பு.
தீபாவளிக்கு முன்னால் ஒரு முறை RMKV சென்று, புடவைகளை கண்ணால் பார்த்து, ரசித்து, மயங்கி, வாங்கியும் வருவோம் வாருங்கள்! RMKV பட்டுடுத்தி பாரம்பரியம் போற்றுவோம்!