மங்கையர் மலர்

வாழைப்பழத்தோலில் இத்தனை நன்மைகளா..!

பி.பாரதி

பால், வாழைப்பழத் தோல் இரண்டையும் சேர்த்து பசை போல் குழைத்து முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்துவந்தால் முகப்பரு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணலாம்.

வாழைப்பழத்தோலில் அதிக அளவு டிரிப்டோபான் மற்றும் வைட்டமின் பி6 உள்ளது. எனவே, இதை உட்கொள்வது மனச்சோர்வு மற்றும் பிற மனநிலைக் கோளாறுகளின் அறிகுறிகளைக் குறைக்கும். பழத்தோலை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தினாலும் மன அழுத்தம் நீங்கும்.

வாழைப்பழ தோலிலுள்ள நாரை எடுத்து அதனுடன் கற்றாழையின் ஜெல்லை கலந்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இதனை கண்களுக்கு அடியில் தேய்த்து 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இவ்வாறு செய்தால் கருவளையம் மறைந்துவிடும். 

சிறு பூச்சிகள் கடித்த வலி மற்றும் வீக்கம் ஆகியவற்றின் மீது வாழைப்பழத்தோல் வைத்து மசாஜ் செய்தால் வலி, வீக்கம் குறையும்.

வாழைப்பழத் தோல்கள் தோல் மருக்களை அகற்றவும், ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. தோல் மருக்கள் குணமடைய, வாழைப்பழத்தை ஒரே இரவில் பாதிக்கப்பட்ட பகுதியில் சுற்றி வைக்கவும் அல்லது படுக்கைக்குச் செல்வதற்கு முன் தோலைத் தேய்க்கவும்.

வாழைப்பழத் தோலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே, இதைத் தேய்ப்பதன் மூலம் தோல் வீக்கத்தைக் குறைக்கலாம் மற்றும் முகப்பருவால் ஏற்படும் வீக்கத்தைக் கூட குறைக்கலாம்.

வாழை பழத் தோலை கொண்டு பற்களை தேய்த்தால் பற்கள் வெண்மையாகும்.

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

SCROLL FOR NEXT