மங்கையர் மலர்

ஈஸியா நுங்கு ரோஸ் மில்க் செய்வது எப்படி?

கல்கி டெஸ்க்

தேவையான பொருட்கள் :

இளசான நுங்கு - 6

பால் - 1½ லிட்டர்

சர்க்கரை - தேவையான அளவு

ரோஸ் எசன்ஸ் - 1 டீஸ்பூன்

செய்முறை:

நுங்கை சுத்தம் செய்து மிக்சியில் போட்டு , சிறிது பால்  ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் பாலை அடுப்பில் வைத்து, சிறு தீயில் நன்றாகக் காய்ச்சி பாதியாக சுண்ட வைத்து, அதில் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கி அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும்.

பின்னர், நுங்கு கலவையுடன், ரோஸ் எசன்ஸ் கலந்து சிறிது நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைத்து ஜில்லென்று பருகவும். சுவையான 'நுங்கு ரோஸ்மில்க்' தயார்.

அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர். உடலுக்கு குளிர்ச்சி மையும், புத்துணர்வையும்  தரும்.

புத்துணர்ச்சியூட்டும் நுங்கு ரோஸ் பால் புதிய பனை பழத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதை உருவாக்க பால், பனை பழம், சர்க்கரை, ரோஸ் மில்க் சாறு சேர்க்கப்படுகிறது.

உங்களிடம் ரோஸ் மில்க் சாறு இல்லையென்றால், ரோஸ் சாறு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தலாம்.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT