முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.
முருங்கை இலையினுடைய பொடியானது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிக்ப பெரிய அளவில் உதவுகின்றது. இது அல்சைமர் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள வைட்டமின் இ மற்றும் வைட்டமின் சி ஆகியவை மன வளம், நியாபக சக்தி ஆகியவற்றைப் பாதுகாக்க உதவுகிறது
முருங்கை இலை சாறு இரத்தசுத்தி செய்வதுடன், எலும்புகளையும் வலுப்படுத்தும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும். தாய்ப் பால் சுரப்பதை அதிகப்படுத்தும். முருங்கை இலைச் சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப் பருக்கள் மறையும்.
முருங்கை பூ ரசம்:
தேவையான பொருட்கள்:
நெல்லி அளவு - புளி
1 - தக்காளி 🍅
2 கைப்பிடி அளவு - முருங்கை பூ
1/2 டீஸ்பூன் - மிளகு
5 பல் - பூண்டு
1 டீஸ்பூன் - சீரகம்
1/4 டீஸ்பூன் - வெந்தயம்
1 - வற்றல்
கருவேப்பிலை, மல்லி தழை - சிறிது
1/4 டீஸ்பூன் -மஞ்சள் தூள்
செய்முறை:
புளியை 1/2 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.
மிளகு, சீரகம், மிக்ஸியில் அடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் பெருங்காயம் சேர்த்து சிவந்ததும் மிளகு கலவை, கருவேப்பிலை, வற்றல் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின் சுத்தம் செய்த முருங்கை பூ சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின் பிசைந்த தக்காளி சேர்த்து வதக்கி புளி தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் சேர்க்கவும்.
ரசம் நன்கு நுரை கூடியதும் பாத்திரத்தில் மாற்றி உப்பு, மல்லி தழை சேர்த்து பரிமாறவும்.