child... Image credit - pixabay
மங்கையர் மலர்

குழந்தையின் முதல் குளியல்: செய்யக்கூடியவையும்; கூடாதவையும்!

கலைமதி சிவகுரு

பிறந்த குழந்தையை குளிப்பாட்ட வைப்பது என்பது முதல் சில நாட்களுக்கு அனைவருக்கும் பெரும் சவாலாகத்தான் இருக்கும். ஆரம்பத்தில் வீட்டில் உள்ள பெரியவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும், குழந்தையின் தாய் இதைச் செய்யும்போது கவனிக்க வேண்டியவற்றை இந்தப் பதிவில் காண்போம்.

குழந்தையை குளிப்பாட்டுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை:

ஷாம்பு மற்றும் பாடி வாஷ் போன்றவற்றை குழந்தை சுகமாக உணருகிறதா  என்பதை முக்கியமாக அறிய வேண்டும். அதேபோல், குளிப்பாட்டும் நீர் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். குழந்தை உணவு அருந்தி அரை மணி நேரம் கழித்தே குளிப்பாட்ட வேண்டும். முதலில் குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்து மெல்லிய விரிப்பில் 15 நிமிடம் கிடத்தலாம்.

குளிப்பாட்டும் விதம்: எண்ணெய் மசாஜ் செய்த பிறகு குழந்தை வழுக்கும் என்பதால் அதை கையாள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குளிப்பாட்ட வைத்திருக்கும் தண்ணீரை கை வைத்து தொட்டுப் பார்த்து குளிக்க தகுந்த சூட்டுடன் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். பேசினில் குழந்தையின் உடல் பகுதி நனையும் வரை மட்டுமே நீர் இருக்க வேண்டும்.

குழந்தையின் தலை மற்றும் கழுத்தைப் பிடித்துக் கொண்டு மெதுவாக டப்பில் வைக்கவும். ஒரு கையால் குழந்தையை பிடித்துக்கொள்ளவும். முதலில் குழந்தையின் கண்களை சுத்தம் செய்ய காட்டன் பந்துகளை தண்ணீரில் நனைத்து மெதுவாக வெளிப்புறமாக துடைக்கலாம். ஒரு கண்ணுக்கு ஒரு பந்து எடுக்கவும். பின்னர் வாய், கழுத்து மற்றும் காதுகளை சுத்தம் செய்ய மென்மையான காட்டன் துணியை தண்ணீரில் நனைத்துப் பயன்படுத்தலாம். காதின் வெளிப்பகுதியை சுத்தம் செய்துவிட்டு உள்பகுதியில் எதுவும் செய்யக் கூடாது.

தொப்புள் காயவில்லை என்றால் மிகவும் கவனமாக அந்தப் பகுதியை ஈரம் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தெரியாமல் ஈரம் பட்டு விட்டால் உடனடியாக நன்கு உலர்ந்த மெல்லிய காட்டன் துணியால் துடைத்து விட வேண்டும். தொப்புள் அருகில் இருந்து துடைக்க ஆரம்பித்து வெளிப்புறமாக தொடர வேண்டும். பிறகு கைகளை சுத்தம் செய்து அக்குள் மற்றும் கைகளின் மடிப்புகளை சுத்தம் செய்யலாம். பிறகு உடலின் மற்ற பகுதிகளை வெந்நீரில் நனைத்து பிழிந்து வேறொரு சுத்தமான துணியால் சுத்தம் செய்துவிட்டு டப்பில் இருக்கும் தண்ணீரை மாற்றிவிட்டு தலையை மேல்நோக்கி பிடித்து பின்பக்கம் வழியுமாறு நீரை ஊற்றவும். குழந்தையின் முகத்தில் நீர் வடியாதபடி நம் கையை குழந்தையின் நெற்றியில் தடுப்பு போல் வைத்துக் கொள்ளலாம். தலையை மிருதுவான சோப் அல்லது ஷாம்பு போட்டு சுத்தம் செய்யலாம். பிறகு உலர்ந்த துணியால் துடைத்து விட்டு புதிய சட்டையை அணிவிக்கலாம்.

செய்ய கூடாதவை: காது, மூக்கு, கண்ணில் எண்ணெய் ஊற்றக்கூடாது, தொண்டையில் கையை விட்டு சளியை எடுக்க கூடாது, தலையில் எண்ணெய் தடவி கடலை மாவு, பயத்த மாவு போன்றவற்றை தேய்க்க கூடாது, தற்சமயம் சாம்பிராணி, பவுடர், கண்களின் புருவத்தில் மை மற்றும் நெற்றியில் விபூதி, குங்குமம் போன்றவற்றில் இரசாயனக் கலப்பு இருப்பதால் அவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

SCROLL FOR NEXT