மங்கையர் மலர்

வாசகியர் கவிதைகள்!

கவிதைத் தூறல்

வாசகர்கள்

- ஹ்ரிஷிகேஷ்

.

ஒரு மழைத்துளியின் பயணம்!

மேகங்களின் செல்ல மோதல்களுக்கு

மெதுவாக மனமுவர்ந்து – உன்னுருவத்தை

மெலிதாக்கி மெல்ல கீழிறங்கினாய்!

நீ செய்த தியாகத்தை

நிராகரிக்க மனமின்றி

நிறங்கள் பல கொண்ட

நீளக்குடை நண்பனை துறந்தேன்!

ற்றுக்கொண்ட பயணம் – தடை

ஏதுமின்றி நிறைவேற

என் படைகளை உனக்காக

ஏவுகிறேன் காகிதக் கப்பல்களாக!

-------------

- மகாலட்சுமி சுப்பிரமணியன்

.

அமரர்

ருக்கும் போது அடாவடியாக

எல்லோராலும் வெறுக்கப்பட்டவர்

அமரர் ஆனதும்

அனைவருக்கும் கடவுள் ஆகி விடுகிறார்.

---------

பொம்மை வியாபாரி

ல கார்கள் வைத்திருந்தும்

நடந்தே செல்கிறான்

பொம்மை வியாபாரி.

---------

மழைத்துளி

முற்றத்து கைப்பிடி சரிவில்

தன்முறைக்காக காத்திருந்து

சறுக்கி மகிழ்கிறது

மழைத்துளி.

---------

கனவு கண்டவன்

திருமணத்திற்கு முன்

கல்யாணம் சொர்க்கத்தில்

நிச்சயிக்கப்படுவதாக

நம்பி கனவு கண்டவன்

தொடங்குகிறான் ஒரு மேட்ரிமோனியல் சைட்டை.

---------

அனுதாபத்துக்குரியவர்

லரின் ஆசையை நிராசையாக்க

பழியும் பாவமும்

சுமந்தவர்

தண்டனைக்குப் பிறகு

அனுதாபத்துக்குரியவராகி

விடுகிறார்.

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

SCROLL FOR NEXT