இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான அடல் சேது பாலத்தை பிரதமர் மோடி திறந்துவைத்துள்ளார். உலகளவில் கவனம்பெற்றுள்ள அடல் சேது பாலத்தின் சிறப்புகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக அடல் சேது என்று இப்பாலத்தில் பெயரிடப்பட்டுள்ளது.
அடல் சேது பாலம் 6 வழி சாலை பாலமாகும்.17ஆயிரத்து 840 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள உலகின் 12வது நீளமான கடல் பாலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
அடல் சேது பாலத்தின் மொத்த நீளம் 21.8 கிலோமீட்டர் ஆகும். இந்த பாலத்தின் 16.5 கி.மீ பகுதி கடலுக்கு மேலேயும் 5.5 கி.மீ பகுதி நிலத்திற்கு மேல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஈபிள் கோபுரத்தை விட 17 மடங்கு அதிகமாகவும், கொல்கத்தாவின் ஹவுரா பாலத்தில் பயன்படுத்தப்பட்ட இரும்புகளை விட நான்கு மடங்கு அதிகமாக இந்த பாலத்தில் இரும்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இதன் முக்கிய அம்சம்.
அடல் சேது பாலத்தின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கான்கிரீட் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட ஆறு மடங்கு அடர்த்தியினை கொண்டது.
அடல் சேது பாலத்தில் சுமார் 1,77,903 மெட்ரிக் டன் எஃகு மற்றும் 5,04,253 மெட்ரிக் டன் சிமெண்ட் பயன்படுத்தப்ப்பட்டு கட்டப்பட்ட அடல் சேது மிகவும் வலிமையானதாக உள்ளது. இதனால் இயற்கை சீற்றத்திலும் பாலம் உறுதியாக இருக்கும்.
அடல் சேது பாலத்தில் 190 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது.
அடல் சேது பாலத்தில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லமுடியும்.
அடல் சேது பாலத்தின் மூலம் மும்பையை நவி மும்பையுடன் இணைக்கும் மணிநேரம் இரண்டு மணி நேரத்தில் இருந்து வெறும் 15 நிமிடங்களில் முடிவடையும் என்பது அடல் சேது பாலத்தின் சிறப்பாகும்.
அடல் சேது பாலத்தின் மூலம் புனே, கோவா மற்றும் தென்னிந்திய நகர்களுக்கும் குறைந்த நேரத்தில் பயணிக்கலாம்.